ரகசிய அறைகள் முதல் வின்டேஜ் கார்கள் வரை! பாலைவனத்தின் நடுவில் ஒரு அருங்காட்சியகம்!
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection: கத்தாரின் பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு கார் அருங்காட்சியகம், 30,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது. விண்டேஜ் கார்கள் முதல் பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் வரை பல அரிய பொருள்கள் இங்கு உள்ளன. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் சில ரகசிய அறைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
கத்தாரில் உள்ள பாலைவனத்தின் மையத்தில், 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பரந்த வளாகத்தில், மிகப் பெரிய கார் அருங்காட்சியகம் உள்ளது. இது ஒரு காலத்தில் அதிகம் அறியப்படாமல் இருந்தது. இந்தக் கார் தொகுப்பு ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி என்பவர் உருவாக்கியது.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
இந்த அருங்காட்சியகம் 30,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது - விண்டேஜ் கார்கள், பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் உட்பட பல அரிய பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
இந்த அருங்காட்சியகம், 1998ஆம் ஆண்டு தொழிலதிபரும் கத்தாரின் ஆளும் குடும்பத்தின் தூரத்து உறவினருமான ஷேக் பைசல் பின் காசிம் அல் தானியால் நிறுவப்பட்டது. பொழுதுபோக்காக அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களை சேகரிக்கத் தொடங்கினார் பைசல். ஆனால் விரைவில் இந்த அருங்காட்சியகம் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பெரிய களஞ்சியமாக மாறியது.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
ஜுராசிக் சகாப்தத்தைச் சேர்ந்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் முதல் 2022 FIFA உலகக் கோப்பையின் நினைவுச்சின்னங்கள் வரை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. 2018 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் பேசிய ஷேக் பைசல், தனது வாழ்நாள் முழுவதும் இந்தச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்தார். "எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் பொருட்களைச் சேகரிப்பேன். எனது தொழில் வளர்ந்தவுடன், எனது சேகரிப்புகளும் வளர்ந்தன. விரைவாக அதிகப் பொருட்களைச் சேகரிக்க முடிந்தது. அவற்றைப் பொதுமக்களும் ரசிக்க அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று விரிவான கார் சேகரிப்பு. பழங்கால ரோல்ஸ் ராய்ஸ், போர்க்கால ஜீப்புகள், கிளாசிக் அமெரிக்கன் ப்யூக்ஸ் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த சொகுசு கார்களின் தொகுப்பு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
அருங்காட்சியகத்தின் அரங்குகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கிளாசிக் ஸ்போர்ட்ஸ் கார்கள் முதல் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற லிமோசின்கள் வரை பல்வேறு வகையான கார்களைக் கண்டு வியப்படைகிறார்கள். இந்த சேகரிப்பு வாகன வரலாற்றைக் கூறுவதாக மட்டும் இல்லாமல், கடந்த காலத்தின் அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கிறது.
Sheikh Faisal Bin Qassim Al Thani Museum Car collection
இந்த அருங்காட்சியகத்தில் கார் சேகரிப்பு தவிர சில ரகசிய அறைகளும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அங்கு உள்ள பொருள்களைப் பார்வையிட சிலருக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு அறையில் மறைந்த இளவரசி டயானாவின் நினைவுப் பொருட்கள் நிரம்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அறையில் சதாம் உசேனுடன் தொடர்புடைய சேகரிப்புகள் இருப்பதாகவும் ஒரு வதந்தி உள்ளது.