ரூ.260 கோடி காருக்குள் ஒரு சொர்க்கம்! புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா டிராப்டெய்ல் அறிமுகம்!
ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா டிராப்டெய்ல் (Arcadia Droptail) ஒரு வலிமையான இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6.75-லிட்டர் V12 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் தனது ஆர்கேடியா டிராப்டைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கம்பீரமான கார் அமேதிஸ்ட் மற்றும் லா ரோஸ் நொயர் கார்களை பின்பற்றி ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கி இருக்கும் மூன்றாவது கோச்பில்ட் கார் ஆகும்.
ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா டிராப்டெய்ல் (Arcadia Droptail) ஒரு வலிமையான இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 6.75-லிட்டர் V12 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இது 593 bhp மற்றும் 841 Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இந்த கார், சுமார் ஐந்து வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
ஆர்கேடியா டிராப்டெய்ல் கார், அலுமினியம் மற்றும் கண்ணாடித் துகள்களால் ஒரு வசீகரிக்கும் வண்ணப்பூச்சுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திறந்த மேல் பகுதியுடன், இரண்டு-கதவுகள் கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு ஒரு தனித்துவமான பயண அனுபவத்தை அளிக்கிறது.
பூமியில் சொர்க்கம் என்ற பொருள் கொண்ட ஆர்காடியா காரின் விலை சுமார் ரூ. 257 கோடி என ரோல்ஸ் ராய்ஸ் நிர்ணயம் செய்துள்ளது.