ரெனால்ட் புதிய “ஃபிளாக்ஷிப்” SUV வந்துடுச்சு! Filante பிரீமியம் ஹைப்ரிட் மாடல் ஷாக்!
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய பிரீமியம் கிராஸ்ஓவர் எஸ்யூவியான 'ரெனால்ட் ஃபிலாண்டே'-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முழு ஹைப்ரிட் மாடல், E-Tech 250 பவர்டிரெய்ன், மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் கொண்ட கேபின் மற்றும் விசாலமான இடவசதியுடன் வருகிறது.

Renault Filante hybrid SUV
உலக சந்தையில் ஒரு “முழுமையான ஃபிளாக்ஷிப்” மாடல் குறைவாக இருப்பதை நீண்ட காலமாக உணர்ந்து வந்த பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான ரெனால்ட், அந்த இடைவெளியை நிரப்ப புதிய பிரிமியம் கிராஸ்ஓவர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ரெனால்ட் ஃபிலாண்டே’ என பெயரிடப்பட்ட இந்த புதிய முழு ஹைப்ரிட் எஸ்யூவி தென் கொரியாவில் அறிமுகமாகி, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் பிராண்டின் இருப்பை பலப்படுத்தும் நோக்கில் தயாராகி வருகிறது. இது ரெனால்ட்டின் 2027 சர்வதேச வளர்ச்சித் திட்டம் முக்கிய மாடலாகவும் பார்க்கப்படுகிறது.
ரெனால்ட்டின் லேண்ட் ஸ்பீட் முன்மாதிரிகளின் பெயரைத் தழுவி உருவான ஃபிலாண்டே, பிரீமியம் பிரிவில் நிறுவனத்தின் மீண்டும் நுழைவு சுட்டிக்காட்டுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் வலுவான முன்பக்கம், ஈரோடைனமிக் மடிப்புகள் மற்றும் நவீன லைட்டிங் சிக்னேச்சர் இடம்பெற்றுள்ளது. பம்பர் பகுதியில் இரட்டை-பேரல் எல்இடி ஹெட்லெம்ப்கள், கூர்மையான எல்இடி டிஆர்எல், சிறிய எல்இடி கூறுகளுடன் கூடிய கிரில் வடிவமைப்பு ஆகியவை இதற்கு தனித்துவமான தோற்றம் தருகின்றன. பக்கவாட்டிலும் கூர்மையான கோடுகள் கொண்டு, பின்னால் பெரிய பம்பர் உடன் நிறைவடைகிறது.
Renault flagship SUV 2026
கேபினுக்குள் நுழைந்தவுடன் எதிர்காலத் தோற்றம் வெளிப்படும் வகையில் உயர்தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 4,915 மிமீ நீளம், 2,820 மிமீ வீல்பேஸ் இது ரெனால்ட்டின் மிக நீளமான மாடலாகவும் சொல்லப்படுகிறது. பயணிகளுக்காக 320 மிமீ பின்புற லெக்ரூம், 654 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட், பயணிகள் டிஸ்ப்ளே என மூன்று 12.3-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன்கள், ஓட்டுநருக்காக 25.6-இன்ச் AR ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை பெரிய ஹைலைட்டாக உள்ளன.
பவர்டிரெய்னில், ஃபிலாண்டே ஜீலி CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இதில் E-Tech 250 ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டது, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.64 kWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 3-ஸ்பீட் DHT Pro ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வரும் இந்த எஸ்யூவி 247 hp பவர் மற்றும் 565 Nm டார்க் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் புசான் ஆலையில் தயாராகும் ஃபிலாண்டே, மார்ச் 2026-ல் லாஞ்ச் செய்யப்படலாம். ஆனால் தற்போது இந்திய சந்தைக்கு வர திட்டமில்லை என கூறப்படுகிறது.

