ரேஞ்ச் ரோவர் கார் வாங்க டவுன் பேமெண்ட் எவ்வளவு கட்டணும் தெரியுமா?
ரேஞ்ச் ரோவர் காரின் விலை மற்றும் லோன் EMI விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 67.9 லட்சம் ரூபாயில் தொடங்கும் ரேஞ்ச் ரோவர் காரை வாங்க, லோன் மற்றும் EMI விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Range Rover EMI
ரேஞ்ச் ரோவர் கார்கள் நிறைய மாடல்கள் இந்தியாவுல இருக்கு. ஆனா, இந்த காரை வாங்குறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, விலை ரொம்ப அதிகம். ரேஞ்ச் ரோவர் கார்கள் விலை பெரும்பாலும் ஒரு கோடிக்கு மேல தான். ரேஞ்ச் ரோவரில் விலை குறைவான கார். 67.9 லட்சம் ரூபாய் தான் இந்த ரேஞ்ச் ரோவர் காரோட எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.
Range Rover Booking
ரேஞ்ச் ரோவரோட 2.0 லிட்டர் டைனமிக் எஸ்இ டீசல் வேரியன்ட்டுக்கு 78.21 லட்சம் ரூபாய் தான் டெல்லியில ஆன் ரோடு விலை. மற்ற நகரங்கள்ல விலை மாறலாம். இந்த காரை வாங்க கிட்டத்தட்ட 70.40 லட்சம் ரூபாய் லோன் எடுக்கணும். நீங்க நாலு வருஷத்துக்கு லோன் எடுத்தால், மொத்தம் 82.48 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்.
Range Rover
ஆறு வருஷத்துக்கு லோன் எடுத்தால், 88.86 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இன்ஸ்டால்மென்ட் கட்ட வேண்டும் என்று பார்க்கலாம். ரேஞ்ச் ரோவரோட டீசல் வேரியன்ட் வாங்க 7.82 லட்சம் ரூபாய் டவுன் பேமெண்ட் கட்ட வேண்டும். நாலு வருஷத்துக்கு லோன் எடுத்தா, 8 சதவீதம் வட்டிக்கு மாசம் 1.72 லட்சம் ரூபாய் EMI கட்ட வேண்டும்.
Range Rover Loan
ஐந்து வருஷத்துக்கு லோன் எடுத்தா, மாசா மாசம் 1.43 லட்சம் ரூபாய் EMI கட்ட வேண்டும். ஆறு வருஷத்துக்கு லோன் எடுத்தா, 8 சதவீதம் வட்டிக்கு மாசம் 1.24 லட்சம் ரூபாய் EMI கட்ட வேண்டும். ஏழு வருஷத்துக்கு லோன் எடுத்தா, மாசா மாசம் 1.10 லட்சம் ரூபாய் EMI கட்ட வேண்டும்.
Range Rover Evoque Down Payment
எட்டு வருஷத்துல மொத்தம் 92.15 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ரேஞ்ச் ரோவர் வாங்க நீங்க லோன் எடுக்குற பேங்கோட பாலிசி, வட்டி விகிதம் இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி விலை மாறலாம். லோன் எடுக்குறப்போ, பேங்கோட எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்கிறது முக்கியம்.
டாடா நானோவை விடுங்க.. இந்த எலக்ட்ரிக் கார் ரூ.3 லட்சத்தை விட கம்மி தாங்க!