- Home
- Auto
- Roadster X+க்கு அரசு க்ரீன் சிக்னல்.. இந்தியாவில் முதல் முறை.. ஓலா எலக்ட்ரிக்கின் பெரிய மைல்கல்
Roadster X+க்கு அரசு க்ரீன் சிக்னல்.. இந்தியாவில் முதல் முறை.. ஓலா எலக்ட்ரிக்கின் பெரிய மைல்கல்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Roadster X+ (9.1 kWh) மாடல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரியுடன் அரசு சான்றிதழைப் பெற்றுள்ளது. iCAT மற்றும் ARAI அமைப்புகளிடமிருந்து கடுமையான சோதனைகளுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் Roadster X+
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கியமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலான Roadster X+ (9.1 kWh) தற்போது அரசு சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்தியாவில் முழுமையாக நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்ட 460 பாரத் செல் பேட்டரி பேக் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த மாடல், மத்திய மோட்டார் வாகன விதிகள் (CMVR), 1989ன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், Roadster X+ வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த Roadster X+ (9.1 kWh) மாடலுக்கு, மத்திய அரசின் வாகன சோதனை அமைப்பான சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் (iCAT), மணேசர் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4680 செல் பேட்டரியுடன் சான்றிதழ் பெறும் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை Roadster X+ பெற்றுள்ளது. மேலும், இந்த 4680 பாரத் செல் தொழில்நுட்பத்தை ஓலா எலக்ட்ரிக் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இருசக்கர வாகன வரிசை முழுவதும் விரிவுபடுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
இந்த வளர்ச்சியைப் பற்றி Ola Electric தரப்பில், “Roadster X+க்கு அரசு சான்றிதழ் கிடைத்துள்ளது, இந்தியாவில் முழுமையான EV தொழில்நுட்பத்தை உருவாக்குவது எங்கள் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், “இந்த மாடல் மூலம், அதிக தூரம் செல்லும், சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை, எங்கள் சொந்த செல்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகிறோம்.
இந்தச் சான்றிதழ், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அறிவித்த விதிகளின் அடிப்படையில் கடுமையான பாதுகாப்பு, மின்சாரம், செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இதில் பிரேக்கிங் செயல்திறன், சத்தம், எலக்ட்ரோமேக்னாடிக் இணக்கம், ரெஞ்ச் உள்ளிட்ட பல சோதனைகள் இடம்பெற்றன. இதற்கு மேலாக, 9.1 kWh பேட்டரி பேக், ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) வழங்கும் AIS-156 திருத்தம் 4 சான்றிதழையும் பெற்றுள்ளது. நீரில் மூழ்கடிப்பு, தீ பாதுகாப்பு, வெப்பம், அதிர்வு போன்ற கடுமையான சோதனைகளில் வெற்றி பெறுவது, பேட்டரி பாதுகாப்பில் Ola Electric அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

