15 வருடத்துக்கு மேல் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது: டெல்லி அரசு அதிரடி உத்தரவு
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது. மாசுவைக் கட்டுப்படுத்த உயரமான கட்டிடங்களில் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் நிறுவப்படும்.

Delhi minister Manjinder Singh Sirsa on Pollution
டெல்லியின் மாசு அளவைக் கட்டுப்படுத்த, மார்ச் 31 முதல் பெட்ரோல் பம்புகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
Delhi smog guns
பல மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவித்த சிர்சா, புதிதாக அமைக்கப்பட்ட பாஜக அரசாங்கம் வாகனங்கள் உமிழும் புகை மற்றும் பிற மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார். கட்டாய புகை எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மின்சார பொது போக்குவரத்திற்கு மாறுதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க அரசு விவாதித்தது என்றும் கூறினார்.
Vehicles older than 15 years
"15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அடையாளம் காணும் கேஜெட்களை பெட்ரோல் பம்புகளில் நிறுவுகிறோம். அதன் மூலம் அடையாளம் காணப்படும் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது" என்று சிர்சா கூறினார். இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Delhi anti-smog measures
எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகளைத் தவிர, டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுவ வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
Delhi anti-pollution measures
"டெல்லியில் சில பெரிய ஹோட்டல்கள், பெரிய அலுவலக வளாகங்கள், டெல்லி விமான நிலையம் போன்ற பெரிய கட்டுமான தளங்கள் உள்ளன. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அவர்கள் அனைவரும் உடனடியாக புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுவுவது கட்டாயமாக்கப்டும். டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் துப்பாக்கிகளை நிறுவ வேண்டும்" என்று அமைச்சர் சிர்சா தெரிவித்தார்.
Delhi fuel supply restrictions
டெல்லியில் உள்ள சிஎன்ஜி பேருந்துகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் டிசம்பர் 2025 க்குள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.