- Home
- Auto
- Electric Auto: ஒரே சார்ஜில் 90 கிமீ செல்லும் மின்சார ஆட்டோ.. ரூ.2.55 லட்சம் மட்டுமே.. வருமானம் கொட்டும்!
Electric Auto: ஒரே சார்ஜில் 90 கிமீ செல்லும் மின்சார ஆட்டோ.. ரூ.2.55 லட்சம் மட்டுமே.. வருமானம் கொட்டும்!
Electric Auto: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தினசரி செலவை குறைக்க நினைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய தேர்வு வந்துள்ளது. பியாக்ஜியோ அறிமுகப்படுத்தி உள்ள ஆட்டோ ஒரே சார்ஜில் 90 கிலோமீட்டர் செல்லும். இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

புதிய மின்சார ஆட்டோ
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் போக்குவரத்து பிரிவிலும் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் தனது, பியாக்ஜியோ நிறுவனம் புதிய எப் வேவ் மின்சார மூன்று சக்கர பயணிகள் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஏப் வேவ், பயணிகளுக்கான மின்சார மூன்று சக்கர வாகனப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.2.55 லட்சம் (தொழிற்சாலை விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துக்காக இந்த வாகனம், ஆட்டோ ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 5.4 கிலோவாட் மணி திறன் கொண்ட மின்கலத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் ஆகும். ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4.5 மணி நேரம் தேவை.
இதனால் நீண்ட காலம் உறுதியுடன் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 19 சதவீத ஏற்றத் திறன் இருப்பதால் மேடு, பள்ளம் மற்றும் சாய்வான சாலைகளிலும் எளிதாக இயக்க முடியும்.
ரூ.3.49 லட்சம் தான் விலை.. நல்ல மைலேஜ்.. நடுத்தர குடும்பங்களுக்கு சூப்பர் கார் இதுதான்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சாய்ஸ்
பயணிகளின் வசதிக்காக தனித்துவமான அதிர்வு தாங்கும் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் சத்தம் குறையும். மேலும், 180 மில்லிமீட்டர் தரை இடைவெளி இருப்பதால் பல்வேறு சாலை நிலைகளிலும் சிரமமின்றி இயக்க முடியும். விசாலமான பயணிகள் அறை தினசரி பயணங்களுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
இந்த வாகன நகரங்களில் பகிர்வு ஆட்டோ சேவை, நிரந்தர வழித்தட போக்குவரத்து மற்றும் குறுகிய தூர பயணிகள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் குறைந்த இயக்கச் செலவு காரணமாக அதிக வருமானம் ஈட்ட உதவும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டியேகோ கிராஃபிக் கூறுகிறார், இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான தேவை வேகமாக உயர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் வாங்கக்கூடியதுடன் வசதி, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த புதிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரூ.90,000 வரை விலை குறைப்பு.. மாருதி சுசுகி அறிவித்த மெகா தள்ளுபடி பட்டியல்

