- Home
- Auto
- Cheapest Car: ரூ.3.49 லட்சம் தான் விலை.. நல்ல மைலேஜ்.. நடுத்தர குடும்பங்களுக்கு சூப்பர் கார் இதுதான்
Cheapest Car: ரூ.3.49 லட்சம் தான் விலை.. நல்ல மைலேஜ்.. நடுத்தர குடும்பங்களுக்கு சூப்பர் கார் இதுதான்
Cheapest Car: ரூ.3.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, சிஎன்ஜி, ஏஎம்டி மற்றும் சிறந்த மைலேஜுடன் பட்ஜெட் கார் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 2026 மாடலில் என்னென்ன சிறப்புகள் உள்ளன?

இந்தியாவின் மலிவான கார்
குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ், எஸ்யூவி போன்ற தோற்றம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட கார் வாங்க விரும்புபவர்களின் முதல் தேர்வுகளில் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்திய சந்தையில் சுமார் ரூ.3.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த சிறிய எஸ்யூவி, முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும், நகரப் பயன்பாட்டுக்கும் மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
ரூ.90,000 வரை விலை குறைப்பு.. மாருதி சுசுகி அறிவித்த மெகா தள்ளுபடி பட்டியல்
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ
இந்த காரின் மிகப்பெரிய பலம், 1.0 லிட்டர் கே-சீரிஸ் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி தேர்வாகும். 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் இந்த கார், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் ஒரு லிட்டருக்கு சுமார் 25.3 கிலோமீட்டர் மைலேஜையும், சிஎன்ஜி மாடலில் ஒரு கிலோ எரிவாயுவுக்கு 32 கிலோமீட்டருக்கும் மேல் சான்றளிக்கப்பட்ட எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது.
எஸ் பிரெஸ்ஸோ 2026
2026 மாடலிலும், உயரமான எஸ்யூவி வடிவமைப்பு, 180 மில்லிமீட்டர் தரை இடைவெளி, 7 அங்குல தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு, முழு டிஜிட்டல் ஓட்டுநர் தகவல் திரை மற்றும் ஹையர்டெக்ட் தளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை காற்றுப் பைகள், ஈபிஎஸ் உடன் மின்னணு பிரேக் விசை பகிர்வு, மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு, மேடு பகுதியில் வாகனம் பின்னோக்கி செல்லாமல் தடுக்கும் வசதி ஆகியவை குறிப்பிட்ட வகைகளில் வழங்கப்படுகின்றன.
அதிக மைலேஜ் கார்
அதே நேரத்தில், பாதுகாப்பை முதன்மையாகக் கருதுபவர்கள் இந்த காரை வாங்கும் முன் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குளோபல் என்.சி.ஏ.பி. பாதுகாப்பு சோதனையில் இந்த கார் குறைவான மதிப்பீடு பெற்றது. பின்னர் சில பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அதிக பாதுகாப்பு எதிர்பார்ப்பவர்கள் மற்ற மாற்று மாடல்களையும் பரிசீலிப்பது நல்லது.
குறைந்த விலை எஸ்யூவி
நகரப் பயணத்திற்கு ஏற்ற இயக்கம், குறைந்த எரிபொருள் செலவு, சிறந்த மைலேஜ் மற்றும் நாடு முழுவதும் பரவலாக உள்ள மாருதி சுகி சேவை மையங்கள் ஆகியவை இந்த காரின் முக்கிய பலமாக உள்ளன. குறைந்த செலவில் நம்பகமான கார் வாங்க விரும்புபவர்கள், குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மற்றும் சிஎன்ஜி மூலம் மாதந்திர செலவை குறைக்க நினைப்பவர்களுக்கு மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ 2026 கவனிக்க வேண்டிய மாடலாக இருக்கிறது.
ஜூன் மாதத்தில் அதிகம் விற்ற பைக்குகள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ!

