MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car Discounts: ரூ.90,000 வரை விலை குறைப்பு.. மாருதி சுசுகி அறிவித்த மெகா தள்ளுபடி பட்டியல்

Car Discounts: ரூ.90,000 வரை விலை குறைப்பு.. மாருதி சுசுகி அறிவித்த மெகா தள்ளுபடி பட்டியல்

Maruti Suzuki Car Discounts: மாருதி சுசுகி ஜூலை 2026-க்கான புதிய தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், வேகன்ஆர், ஆல்டோ கே10 உள்ளிட்ட பல மாடல்களுக்கு பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 05 2026, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூலை 2026 கார் ஆஃபர்
Image Credit : Asianet News

ஜூலை 2026 கார் ஆஃபர்

புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு மாருதி சுசுகி ஜூலை 2026-க்கான அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான இந்த நிறுவனம், தனது அரினா மற்றும் டூர் மாடல்களுக்கு பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் மொத்த சலுகை ரூ.90,000 வரை கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாருதி சுசுகி ஆஃபர்
Image Credit : Google

மாருதி சுசுகி ஆஃபர்

இந்த மாத தள்ளுபடி பட்டியலில் அதிகபட்ச பலனை பெறும் மாடலாக விக்டோரிஸ் ஹைபிரிட் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலுக்கு ரூ.90,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. மேலும், விக்டோரிஸ் சிஎன்ஜி மாடலுக்கு ரூ.80,000, பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு ரூ.55,000 வரை நன்மைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்கள்.

Related Articles

Related image1
Best Safe Cars Under 5 Lakh: ரூ.5 லட்சத்துக்குள் வாங்கலாம்! அதிக மைலேஜ், சிஎன்ஜி, 6 ஏர்பேக் கொண்ட சிறந்த 4 கார்கள் இதோ
Related image2
Top 5 Selling Car: ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ
35
வேகன்ஆர் சலுகைகள்
Image Credit : Maruti Suzuki

வேகன்ஆர் சலுகைகள்

நடுத்தர மற்றும் குறைந்த விலையில் கார் வாங்குபவர்களுக்கும் மாருதி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. வேகன்ஆர் மாடலுக்கு ரூ.52,500 வரை, ஆல்டோ கே10 எல்எக்ஸ்ஐ மாடலுக்கு ரூ.52,500 வரை, மற்ற ஆல்டோ கே10 வேரியண்ட்டுகளுக்கு ரூ.42,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் தானியங்கி மாடலுக்கு ரூ.45,000, மேனுவல் மற்றும் சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ.40,000 வரை பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ

45
ஈகோ தள்ளுபடி
Image Credit : our own

ஈகோ தள்ளுபடி

இதுமட்டுமல்லாமல், எஸ்-பிரஸ்ஸோ, செலரியோ மற்றும் ஈகோ மாடல்களுக்கும் தலா ரூ.37,500 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. வணிக பயன்பாட்டுக்கான டூர் ஹெச்3, டூர் வி, டூர் ஹெச்1 மற்றும் டூர் எஸ் மாடல்களுக்கும் ரூ.25,000 முதல் ரூ.70,000 வரை பல்வேறு நிதி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆஃபர்கள் டீலர்ஷிப் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்.

55
மாருதி தள்ளுபடி
Image Credit : Google

மாருதி தள்ளுபடி

பருவமழை சீசனை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் மாருதி சுசுகி இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அனைத்து சலுகைகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அருகிலுள்ள மாருதி டீலர்ஷிப்பில் தொடர்புகொண்டு, தங்கள் நகரத்திற்கான துல்லியமான தள்ளுபடியை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி கார்
ஆல்டோ கார்
வேகன் ஆர்
தள்ளுபடிகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு சார்ஜ்... 180 கிமீ பயணம்! ADAS வசதியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த Keeway ஸ்கூட்டர்!
Recommended image2
Top 5 Selling Car: ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ
Recommended image3
Best Safe Cars Under 5 Lakh: ரூ.5 லட்சத்துக்குள் வாங்கலாம்! அதிக மைலேஜ், சிஎன்ஜி, 6 ஏர்பேக் கொண்ட சிறந்த 4 கார்கள் இதோ
Related Stories
Recommended image1
Best Safe Cars Under 5 Lakh: ரூ.5 லட்சத்துக்குள் வாங்கலாம்! அதிக மைலேஜ், சிஎன்ஜி, 6 ஏர்பேக் கொண்ட சிறந்த 4 கார்கள் இதோ
Recommended image2
Top 5 Selling Car: ஜூன் 2026 கார் விற்பனையில் யார் நம்பர் 1.? டாப் 5 நிறுவனங்களின் முழு பட்டியல் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved