ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் புதிய கார்கள்! டாடா முதல் டொயோட்டா வரை எஸ்யூவி அணிவகுப்பு!
பண்டிகை காலம் வந்துவிட்டது. சமீப காலமாகவே கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த பண்டிகை சீசனில் புதிய மாடல்களை வெளியிட முன்னணி கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் கார்கள் எவை என்பதைத் தொகுப்பில் பார்க்கலாம்.
Maruti Suzuki Dzire Sedan
மாருதி சுஸுகி டிசையர் செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வடிவமைப்பு, 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் எஞ்சின் மேனுவல், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆகிய அம்சங்களுடன் இருக்கும் எனத் தெரிகிறது. புதிய டிசையர் சிஎன்ஜி வகையிலும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
MG Windors EV
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது MG Windors EV மின்சாரக் எலெக்ட்ரிக் காரை செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிட உள்ளது. வின்ட்சர் EV விசாலமான கேபின், பனோரமிக் சன்ரூஃப், எல்இடி விளக்குகள், டிச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பிற அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் வரை செல்லுமாம். இதன் விலை ரூ.17 முதல் 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hyundai Alcazar facelift
ஹூண்டாய் நிறுவனம் Alcazar SUV காரை வெளியிடத் தயாராகி வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கிடைக்குமாம்.
Tata Nexon CNG
டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் செப்டம்பர் மாதமே வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக இது சிறந்த எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கலாம். பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வெளியாகும் முதல் காராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Mercedes-Maybach EQS
மெர்சிடிஸ் நிறுவனத்தின் Maybach EQS இன்று, செப்டம்பர் 5ஆம் தேதி, வெளியாகிறது. இந்தச் சொகுசு கார் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. இது முதன்முறையாக சீனாவில் அறிமுகமாகிறது. இதன் 108.4 KWh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 600 கிலோமீட்டர் வரை செல்லுமாம்.
Tata Curve ICE
டாடாவின் கர்வ் எஸ்யூவி காரின் பெட்ரோல் டீசல் எடிஷன் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும். மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களும் உள்ளன.