இந்தியாவில் புதிய சொகுசு கார்களை அறிமுகப்படுத்தும் மெர்சிடிஸ்-பென்ஸ்!
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் Maybach GLS 600 மற்றும் AMG S 63 4MATIC E என இரண்டு புதிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை மே 22ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
Maybach GLS 600
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் மே 22ஆம் தேதி புதிய கார்கள் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. அந்த நிகழ்வில் Maybach GLS 600 மற்றும் AMG S 63 4MATIC E என இரண்டு புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
Mercedes Benz Maybach GLS 600
Maybach GLS 600 கார் சிறிய அப்டேட் செய்யப்பட்ட மாடலாக இருக்கும். ஆனால், AMG S 63 புதிய அடையாளத்துடன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் அதன் மின்சார வாகன வரிசையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் ஒன்பது புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.
Maybach GLS 600 2024
இந்த ஆண்டில் குறைந்தது இரண்டு புதிய Mercedes-AMG மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும் என்றும் கூறியிருந்தது. புதிய எலக்ட்ரிக் கார்களில் Maybach EQS அதிகம் எதிர்பார்க்கப்படும் காராக உள்ளது.
Mercedes Benz AMG GLC 43 4MATIC E
மேபேக் ஜிஎல்எஸ் 600 (Maybach GLS 600) விலை ரூ.2.96 கோடி. அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலின் விலை ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஎம்ஜி எஸ் 63 (AMG S 63 4MATIC+ E) ரூ.3 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது.
Mercedes-Benz AMG
இரண்டு மாடல்களும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
Mercedes-Benz India
புதுப்பிக்கப்பட்ட Maybach GLS 600 தனித்துவமான வெர்ட்டிகிள் குரோம் கிரில் ஸ்லேட்டுகளைக் கொண்டிருக்கிறது. முன்பை விட சற்று பெரிய அளவிலும் உள்ளது. முன்பக்க பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய 22-இன்ச் சக்கரங்கள் இருக்கும். ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பும் மாறியுள்ளது. ட்வின்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சின், 48V ஸ்டார்டர்-ஜெனரேட்டர் உள்ளன.
Mercedes-AMG
புதிய AMG S 63 காரிலும் ட்வின்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 13.1kWh லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த எஸ்-கிளாஸ் காராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் பேட்டரி 33 கிமீ ரேஞ்ச் மட்டுமே வழங்குகிறது. ஏஎம்ஜி ரைடு கன்ட்ரோல்+ சஸ்பென்ஷன், ஏஎம்ஜி ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல் ஸ்டேபிலைசேஷன், எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆன்டி-ரோல் பார்கள் மற்றும் ரியர் ஆக்சில் ஸ்டீயரிங் ஆகியவையும் உள்ளன.