26 கிமீ மைலேஜ்: ரூ.7.8 லட்சத்தில் அட்டகாசமான 7 சீட்டர் கார் - எல்லா ஊர்லயும் புக்கிங் குவியுது
மாருதி சுஸுகி எர்ட்டிகாவை கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட்டில் (சிஎஸ்டி) வாங்கினால் 28% GSTக்கு பதிலாக 14% மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் ராணுவ வீரர்களுக்கு நல்ல தொகை சேமிப்பு கிடைக்கும். எர்ட்டிகாவின் சிஎஸ்டி விலை விவரங்கள் இங்கே.
26 கிமீ மைலேஜ்: ரூ.7.8 லட்சத்தில் அட்டகாசமான 7 சீட்டர் கார் - எல்லா ஊர்லயும் புக்கிங் குவியுது
இந்தியாவில் முன்னணியில் உள்ள 7 சீட்டர் காரான மாருதி சுஸுகி எர்ட்டிகாவை கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட்டில் (சிஎஸ்டி) வாங்கினால் 28% GSTக்கு பதிலாக 14% மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் ராணுவ வீரர்களுக்கு நல்ல தொகை சேமிப்பு கிடைக்கும். எர்ட்டிகாவின் Lxi வேரியண்ட்டின் சிஎஸ்டி விலை ரூ.7.89 லட்சம். இதன் சிவில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.69 லட்சம். அதாவது, இந்த வேரியண்ட்டில் ரூ.80,000 சேமிப்பு. எட்டு வேரியண்ட்கள் இங்கு கிடைக்கின்றன, அதிகபட்சமாக ரூ.94,000 வரை சேமிக்கலாம்.
சிறந்த 7 சீட்டர் கார்
கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் (CSD) பற்றி தெரிந்து கொள்வோம். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் இது. இந்தியாவில் அகமதாபாத், பாக்டோக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 34 சிஎஸ்டி கிடங்குகள் உள்ளன. இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் இது, ராணுவ வீரர்களுக்கு உணவு, மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் போன்றவற்றை மலிவு விலையில் வழங்குகிறது. சிஎஸ்டியில் கார் வாங்க தகுதியுடையவர்கள்: பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களின் விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு துறை பணியாளர்கள் போன்றோர்.
அதிக மைலேஜ் தரும் 7 சீட்டர் கார்
மாருதி எர்ட்டிகாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 103 PS மற்றும் 137 Nm திறன் கொண்டது. CNG ஆப்ஷனும் உள்ளது. பெட்ரோல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 20.51 கிமீ, CNG மாடலின் மைலேஜ் கிலோவுக்கு 26.11 கிமீ. பேடில் ஷிஃப்டர்கள், ஆட்டோ ஹெட்லைட்கள், ஆட்டோ ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
குடும்பத்தோட போறதுக்கு ஏற்ற கார்
7 இன்ச் டச் ஸ்கிரீனுக்கு பதிலாக 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. வாய்ஸ் கமாண்ட் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சுஸுகியின் ஸ்மார்ட்பிளே புரோ தொழில்நுட்பம் இதில் உள்ளது. கனெக்டட் கார் அம்சங்களில் வாகன டிராக்கிங், டோ அவே எச்சரிக்கை மற்றும் டிராக்கிங், ஜியோ-ஃபென்சிங், ஓவர்-ஸ்பீடிங் எச்சரிக்கை, ரிமோட் ஃபங்ஷன் போன்றவை அடங்கும். 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமராவும் உள்ளது.
குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் கார்
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா, மாருதி XL6, கியா கேரன்ஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா ரூமியன், ரெனால்ட் ட்ரைபர் போன்ற மாடல்களுடன் மாருதி சுஸுகி எர்ட்டிகா போட்டியிடுகிறது. 7 சீட்டர் பிரிவில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ, போலிரோ போன்ற மாடல்களுக்கும் இது சவால் விடுகிறது.