- Home
- Auto
- வெறும் ரூ.5.6 லட்சத்தில் 7 சீட்டர் கார்! Maruti Suzuki Eeco ஈஎம்ஐயில் வாங்க எவ்வளவு செலவாகும்?
வெறும் ரூ.5.6 லட்சத்தில் 7 சீட்டர் கார்! Maruti Suzuki Eeco ஈஎம்ஐயில் வாங்க எவ்வளவு செலவாகும்?
மாருதி ஈக்கோவின் சமீபத்திய விலை, EMI விவரங்கள் மற்றும் வாகனத்தின் முக்கிய அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் 7 சீட்டர் சிஎன்ஜி கார் வாங்க விரும்புவோருக்கு இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

வெறும் ரூ.5.6 லட்சத்தில் 7 சீட்டர் கார்! Maruti Suzuki Eeco ஈஎம்ஐயில் வாங்க எவ்வளவு செலவாகும்?
இந்தியாவிலேயே மிகவும் கம்மியான விலையில கிடைக்கக்கூடிய 7 சீட்டர் சிஎன்ஜி வேன் மாருதி ஈக்கோதான். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 6.70 லட்சம் ரூபாய் மட்டும்தான். மாருதி சுசுகி ஈக்கோவுக்கு மாதம் மாதம் நல்ல விற்பனை கிடைக்கிறது. நீங்கள் இந்த வேனை லோன் மூலம் இஎம்ஐயில் வாங்க திட்டமிட்டிருந்தால், அதன் கணக்கு வழக்குகளை முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
8% வட்டி விகிதம்
மாருதி சுசுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி (O) வாங்க, நீங்கள் 8% வட்டி விகிதத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 3 வருடத்திற்கு மாத இஎம்ஐ 18,802 ரூபாயும், 4 வருடத்திற்கு மாத இஎம்ஐ 14,648 ரூபாயும், 5 வருடத்திற்கு மாத இஎம்ஐ 12,166 ரூபாயும், 6 வருடத்திற்கு மாத இஎம்ஐ 10,520 ரூபாயும், 7 வருடத்திற்கு மாத இஎம்ஐ 9,352 ரூபாயும் செலுத்த வேண்டும்.
குறைந்த விலையில் 7 சீட்டர் கார்
8.5% வட்டி விகிதத்தில்
மாருதி சுசுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி (O) வாங்க, நீங்கள் 8.5% வட்டி விகிதத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 3 வருடத்திற்கு மாத இஎம்ஐ 18,941 ரூபாயும், 4 வருடத்திற்கு மாத இஎம்ஐ 14,789 ரூபாயும், 5 வருடத்திற்கு மாத இஎம்ஐ 12,310 ரூபாயும், 6 வருடத்திற்கு மாத இஎம்ஐ 10,667 ரூபாயும், 7 வருடத்திற்கு மாத இஎம்ஐ 9,502 ரூபாயும் செலுத்த வேண்டும்.
9% வட்டி விகிதத்துல
மாருதி சுசுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி (O) வாங்க, நீங்கள் 9% வட்டி விகிதத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 3 வருடத்திற்கு மாத இஎம்ஐ 19,080 ரூபாயும், 4 வருடத்திற்கு மாத இஎம்ஐ 14,931 ரூபாயும், 5 வருடத்திற்கு மாத இஎம்ஐ 12,455 ரூபாயும், 6 வருடத்திற்கு மாத இஎம்ஐ 10,815 ரூபாயும், 7 வருடத்திற்கு மாத இஎம்ஐ 9,653 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாருதி சுசுகி கார்
9.5% வட்டி விகிதத்துல
மாருதி சுசுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி (O) வாங்க, நீங்கள் 9.5% வட்டி விகிதத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 3 வருடத்திற்கு மாத இஎம்ஐ 19,220 ரூபாயும், 4 வருடத்திற்கு மாத இஎம்ஐ 15,074 ரூபாயும், 5 வருடத்திற்கு மாத இஎம்ஐ 12,601 ரூபாயும், 6 வருடத்திற்கு மாத இஎம்ஐ 10,965 ரூபாயும், 7 வருடத்திற்கு மாத இஎம்ஐ 9,806 ரூபாயும் செலுத்த வேண்டும்.
10% வட்டி விகிதத்துல
மாருதி சுசுகி ஈக்கோ 5 சீட்டர் ஏசி சிஎன்ஜி (O) வாங்க, நீங்கள் 10% வட்டி விகிதத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 3 வருடத்திற்கு மாத இஎம்ஐ 19,360 ரூபாயும், 4 வருடத்திற்கு மாத இஎம்ஐ 15,218 ரூபாயும், 5 வருடத்திற்கு மாத இஎம்ஐ 12,748 ரூபாயும், 6 வருடத்திற்கு மாத இஎம்ஐ 11,116 ரூபாயும், 7 வருடத்திற்கு மாத இஎம்ஐ 9,961 ரூபாயும் செலுத்த வேண்டும்.
கவனிக்க, வட்டி விகிதங்கள், டவுன் பேமெண்ட், இஎம்ஐ எல்லாம் உங்கள் கிரெடிட் ஸ்கோரையும், வங்கி விதிமுறைகளையும் பொறுத்து மாறும். கடன் பெறுவதற்கு முன்பாக வங்கியின் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதிக மைலேஜ் தரும் 7 சீட்டர் கார்
ஈக்கோ ஸ்பெஷல்
மாருதி ஈக்கோவில் கே சீரிஸ் 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் எஞ்சின் 80.76 பிஎஸ் பவரையும், 104.5 என்எம் டார்க்கையும் கொடுக்கும். அதே நேரம் சிஎன்ஜி மாடலில் 71.65 பிஎஸ் பவரும், 95 என்எம் டார்க்கும் கிடைக்கும். டூர் வேரியன்ட்டுக்கு பெட்ரோலில் 20.2 கிலோமீட்டர்/லிட்டரும், சிஎன்ஜிக்கு 27.05 கிலோமீட்டர்/கிலோகிராமும் மைலேஜ் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம், பயணிகள் வாகனத்தில் பெட்ரோலுக்கு 19.7 கிலோமீட்டர்/லிட்டரா குறையும், சிஎன்ஜிக்கு 26.78 கிலோமீட்டர்/கிலோகிராமாக குறையும்.
7 சீட்டர் காரின் தவணை விலை
தற்போது இருக்கின்ற பாதுகாப்பு சட்டதிட்டங்களோடு, வரப்போற சட்டதிட்டங்களையும் சேர்த்து 11 பாதுகாப்பு அம்சங்களோடு இந்த ஈக்கோ வருகிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், எஞ்சின் இம்மொபிலைசர், கதவுகளுக்கான சைல்டு லாக், சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடியோட ஏபிஎஸ், டூயல் பிரண்ட் ஏர் பேக்ஸ் இதில் உள்ளது. ஈக்கோவுக்கு இப்போது புது ஸ்டியரிங் வீலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் கிடைக்கிறது. இந்த ரெண்டு யூனிட்டையும் நிறுவனம் அதன் எஸ்-பிரஸ்ஸோலயும், செலிரியோலயும் யூஸ் பண்ணுது. பழைய ஸ்லைடிங் ஏசி கன்ட்ரோலுக்கு பதிலாக புது ரோட்டரி யூனிட்டும் சேர்த்துள்ளன.
ஈக்கோவை 4 வேரியன்ட்களில் வாங்கலாம். இதில் 5-சீட்டர், 7-சீட்டர், கார்கோ, டூர், ஆம்புலன்ஸ் பாடி ஸ்டைல்ஸ் உள்ளது. ஈக்கோவின் அளவுகள் பற்றி பார்த்தால், ஈக்கோவின் நீளம் 3,675 எம்எம், அகலம் 1,475 எம்எம், உயரம் 1,825 எம்எம். ஆம்புலன்ஸ் வெர்ஷனுக்கு 1,930 எம்எம் உயரம் இருக்கு. 5.32 லட்சத்துல இருந்து 6.58 லட்சம் வரைக்கும் இதோட அஞ்சு சீட்டர் வேரியன்ட்டோட எக்ஸ் ஷோரூம் விலை. அதே நேரம், 7 சீட்டர் வேரியன்ட்டுக்கு 5.61 லட்சம் ரூபா எக்ஸ் ஷோரூம் விலை.