ஒருமுறை சார்ஜில் 428 கி.மீ வரை மைலேஜ் தரும் புதிய இ-விடாரா EV.! எல்லாம் ரெடியா.!
மாருதி சுசுகியின் முதல் முழு எலக்ட்ரிக் எஸ்யூவியான இ-விடாரா, 2025 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது 49kWh மற்றும் 61kWh என இரண்டு பேட்டரி விருப்பங்களுடன், அதிகபட்சமாக 428 கி.மீ. ரேஞ்ச் வழங்கும்.

மாருதி சுசுகி எலக்ட்ரிக் எஸ்யூவி
மாருதி சுசுகியின் முதல் முழு எலக்ட்ரிக் எஸ்யூவியான இ-விடாரா (e-விடாரா), 2023 ஆட்டோ எக்ஸ்போவில் eVX கான்செப்டாக முதன்முதலில் அறிமுகமானது. இதைத் தொடர்ந்து, 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் தயாரிப்புக்கு தயாரான மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. இது இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா BE 6, எம்ஜி ZS EV மற்றும் டாடா சியாரா EV ஆகிய இரண்டுக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தகவலின்படி, மாருதி சுசுகி இ-விடாரா 2025 டிசம்பர் 2 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்
இந்த இ-விடாரா, சர்வதேச மாடலின் பேட்டரி விருப்பங்களுடன் இந்தியாவிற்கும் வரும். இதில் 49kWh மற்றும் 61kWh என இரண்டு பேட்டரி பேக்குகள் வழங்கப்படும். 49kWh மாடல் 144bhp பவர் வழங்கி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 344 கி.மீ. ரேஞ்ச் தரும். 61kWh மாடல் 174bhp பவர் மற்றும் 428 கி.மீ. ரேஞ்ச் வழங்கும். அதே நேரத்தில், 61kWh பேட்டரியுடன் வரும் AWD (ஆல்-வீல் டிரைவ்) மாடல் 184bhp பவர் மற்றும் 394 கி.மீ. மைலேஜ் வழங்கும். ஆரம்பத்தில் சிங்கிள் மோட்டார் மாடல் மட்டுமே விற்பனைக்கு வரும். டூயல் மோட்டார் விருப்பம் பின்னர் அறிமுகமாகும்.
வடிவமைப்பு அம்சங்கள்
இ-விடாராவின் வடிவமைப்பு கான்செப்ட் மாடலைப் போலவே தக்கவைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டிரை-ஸ்லாஷ் எல்இடி டிஆர்எல், பின்புறம் வட்டமான எல்இடி டெயில் லைட்ஸ், சி-பில்லர் ஹாண்டில், முன்பு சார்ஜிங் போர்ட், மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் (AWD மாடல்) ஆகியவை இதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை உயர்த்துகின்றன.
அளவுகள் மற்றும் எடை
புதிய மாருதி இ-விடாரா 4,275 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம், மற்றும் 1,635 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,700 மிமீ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ, மற்றும் எடை 1,702 முதல் 1,899 கிலோ வரை இருக்கும். இதன் வடிவமைப்பு, இடவசதி மற்றும் எலக்ட்ரிக் திறன் ஆகியவை சேர்ந்து, இ-விடாராவை இந்திய எஸ்யூவி சந்தையில் மிகப்பெரிய மின்சார போட்டியாளராக மாற்றும்.