ரூ.40,000 தள்ளுபடி.. கவாசாகி நிஞ்சா ZX-4R பைக் வாங்க சரியான டைம்
கவாசாகி நிறுவனம் தனது நிஞ்சா ZX-4R பைக்கில் ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த சலுகை 2025 மே மாத இறுதி வரை அல்லது இருப்பு தீரும் வரை செல்லுபடியாகும். இந்த தள்ளுபடியை ரைடிங் கியர் அல்லது பாதுகாப்பு கருவிகள் வாங்க பயன்படுத்தலாம்.

Kawasaki Ninja ZX-4R Price Cut
ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான கவாசாகி, நிஞ்சா ZX-4R பைக்கில் ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் நேரடியாகப் பொருந்தும். இந்த சலுகை 2025 மே மாத இறுதி வரை அல்லது இருப்பு தீரும் வரை செல்லுபடியாகும். கவாசாகி ZX-4R, நிறுவனத்தின் ZX-6R பைக்கிற்கு அடுத்தபடியாகவும், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை இன்லைன்-ஃபோர் பைக்காகவும் உள்ளது. இந்த பைக்கில் 399 சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் உள்ளது, இது 14,500 rpm-ல் 75.9 bhp பவரையும் 13,000 rpm-ல் 39 Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
கவாசாகி நிஞ்ஜா ZX-4R விலை குறைப்பு
6 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் கொண்டது. முன்புறம் யுஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளது. பைக்கின் அம்சங்களைப் பற்றிப் பார்த்தால், முழு LED விளக்குகள், ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய TFT டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல், 17 இன்ச் அலாய் வீல்கள், இரட்டை டிஸ்க் பிரேக்குகள் போன்றவை உள்ளன. இந்த ரூ.40,000 தள்ளுபடியை நல்ல ரைடிங் கியர், பிராண்டட் ஹெல்மெட் அல்லது பாதுகாப்பு கருவிகள் வாங்கப் பயன்படுத்தலாம்.
₹40,000 தள்ளுபடி கவாசாகி
இது உங்கள் பைக் ஓட்டும் அனுபவத்தைப் பாதுகாப்பாகவும், ஸ்டைலாகவும் மாற்றும். இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லாத ஒரே 400 சிசி இன்லைன்-4 என்ஜின் பைக் கவாசாகி நிஞ்சா ZX-4R. நீங்கள் ஒரு தனித்துவமான, வேகமான, பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்கைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். பவர், ஸ்டைல், பிராண்ட் மதிப்பு ஆகியவற்றின் கலவையான இந்த சூப்பர் பைக்கை இப்போது மிகவும் மலிவு விலையில் வாங்கலாம்.