புதுசா கார் வாங்க போறீங்களா? Hyundai Creta வாங்க வெறும் ரூ.1 லட்சம் இருந்தா போதும்
கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட கார், இப்போது அத்தியாவசியப் பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பயன்படுத்திய கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகள் வழங்கும் சலுகைகளால் புதிய கார்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குவதற்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கின்றன. இந்தக் காரை சொந்தமாக்க எவ்வளவு டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும்? மாதத் தவணை எவ்வளவு? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

Hyundai Creta
அதிகம் விற்பனையாகும் கார்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்று. கிரெட்டாவின் விலை ரூ.11.11 லட்சத்தில் தொடங்கி ரூ.20.50 லட்சம் வரை உள்ளது. இந்தக் காரை வாங்குவோருக்கு வங்கிகள் சிறந்த மாதத் தவணைத் திட்டங்களை வழங்குகின்றன.
Creta Car
ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்
கிரெட்டாவின் தொடக்க விலை மாடலுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். ரூ.1 லட்சம் டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும். 7 ஆண்டுகளுக்குக் கடன் பெற்றால், 9% வட்டி விகிதத்தில் மாதம் ரூ.16,000 தவணை செலுத்த வேண்டும்.
Hyundai Creta Down payment
சிபில் ஸ்கோர் தேவையில்லை
6 ஆண்டுகளில் கடனை அடைக்க, மாதம் ரூ.18,000 தவணை 9% வட்டியுடன் செலுத்த வேண்டும். புதிய கார் என்பதால் கடன் பெற சிபில் மதிப்பெண் அவசியமில்லை.
New Creta Car
Hyundai Creta மைலேஜ்
கிரெட்டாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. மேனுவல் கியர் மாடல் லிட்டருக்கு 16-17 கி.மீ மைலேஜ் தரும். 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.