MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Honda Car Offers: ஹோண்டா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி மழை! ரூ.2.34 லட்சம் வரை விலை குறைப்பு!

Honda Car Offers: ஹோண்டா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி மழை! ரூ.2.34 லட்சம் வரை விலை குறைப்பு!

Honda Car Offers: ஹோண்டா கார்களுக்கு அக்டோபர் மாத அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எலிவேட் காருக்கு ரூ.2.34 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. சிட்டி மற்றும் அமேஸ் கார்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Rayar A
Published : Oct 05 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹோண்டா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி
Image Credit : Gemini

ஹோண்டா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா போன்ற பாரம்பரிய மற்றும் முன்னணி நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்தினாலும் ஜப்பானியத் தயாரிப்பான ஹோண்டா கார்களுக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. உலகளாவிய தரம், நீண்ட உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இந்தியர்களின் விருப்பமான தேர்வாக ஹோண்டா விளங்கி வருகிறது.

இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்தும் வகையிலும், பண்டிகைக் கால விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த அக்டோபர் மாதத்திற்கான மாபெரும் தள்ளுபடி சலுகைகளை ஹோண்டா இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு கார் மாடல்களுக்கு லட்சக்கணக்கில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. ஹோண்டா எலிவேட் (Honda Elevate)
Image Credit : stockPhoto

1. ஹோண்டா எலிவேட் (Honda Elevate)

இந்திய எஸ்யூவி (SUV) சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் தற்போதைய வெற்றி முகமாகவும், மிக முக்கிய தூணாகவும் விளங்குவது Elevate காராகும். கம்பீரமான தோற்றம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இந்த காருக்குத்தான் இந்த மாதத்தின் மிக அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சத்து 34 ஆயிரத்து 600 வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூபாய் 11.99 லட்சமாகும். இந்த மாடலில் 1.5 லிட்டர் திறன் கொண்ட நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மேனுவல் மற்றும் அதிநவீன சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இந்த எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கிறது.

35
2. ஹோண்டா சிட்டி மற்றும் நியூ சிட்டி (Honda City & New City)
Image Credit : Google

2. ஹோண்டா சிட்டி மற்றும் நியூ சிட்டி (Honda City & New City)

நடுத்தர மற்றும் பிரீமியம் செடான் கார்களின் பிரிவில் சக்கரவர்த்தி போல வலம் வரும் Honda City மற்றும் New City கார்களுக்கும் இந்த மாதச் சலுகை பட்டியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

New City மாடல்: இந்திய நுகர்வோர் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புதிய நவீன செடான் காருக்கு ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்து 900 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களில் 1.5 லிட்டர் சக்திவாய்ந்த பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி அலுவலகப் பயணம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு உகந்த வகையில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்களில் இந்த கார் தாராளமாக கிடைக்கிறது.

45
3. ஹோண்டா அமேஸ் (New Amaze & 2nd Gen)
Image Credit : pr

3. ஹோண்டா அமேஸ் (New Amaze & 2nd Gen)

குறைந்த பட்ஜெட்டில் ஒரு சொகுசான காம்பக்ட் செடான் காரை சொந்தமாக்க வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்காக அமேஸ் கார்களின் மீதும் கவர்ச்சிகரமான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை அமேஸ் காருக்கு ரூபாய் 66 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 7.65 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

இதன் முந்தைய இரண்டாம் தலைமுறை (2nd Gen) மாடலுக்கு ரூபாய் 57 ஆயிரத்து 600 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டுக்கு இது மிகச் சரியான தேர்வாக அமையும்.

55
வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு...
Image Credit : our own

வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு...

ஹோண்டா நிறுவனத்தின் இந்த அசத்தலான அக்டோபர் மாதச் சலுகைகள் மூலம் புதிய கார்களை மிகக் குறைந்த விலையில் மற்றும் எளிமையான தவணை முறையில் சொந்தமாக்கிக் கொள்ள இதுவே மிகவும் சரியான தருணமாகும். இந்தச் சலுகைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமை உடனடியாகத் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைத் தொகைகள் மற்றும் இருப்புகள் உங்கள் நகரத்திற்கு ஏற்ப சிறிது மாறுபட வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு அருகில் உள்ள ஷோரும்களை தொடர்பு கொள்வது நல்லது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
ஹோண்டா கார்கள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image2
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
Cars Under 10 Lakhs: ஸ்விஃப்ட் முதல் பிரெஸ்ஸா வரை.. ரூ.10 லட்சத்திற்குள் கலக்கும் டாப் 5 கார்களின் லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved