MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Cars Under 10 Lakhs: ஸ்விஃப்ட் முதல் பிரெஸ்ஸா வரை.. ரூ.10 லட்சத்திற்குள் கலக்கும் டாப் 5 கார்களின் லிஸ்ட்!

Cars Under 10 Lakhs: ஸ்விஃப்ட் முதல் பிரெஸ்ஸா வரை.. ரூ.10 லட்சத்திற்குள் கலக்கும் டாப் 5 கார்களின் லிஸ்ட்!

Cars Under 10 Lakhs: இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள் குறைந்த விலையில் அதிக மைலேஜ், பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்களை வழங்கி வருகின்றன. இந்த கார்களின் பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 02 2026, 09:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள்
Image Credit : Google

ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள்

இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் நீண்ட நாள் கனவான சொந்த கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றும் வகையில், ரூபாய் 10 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல் தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் அதிக மைலேஜ், நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகப் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில் இந்தக் கார்கள் முன்னணி வகிக்கின்றன. ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 5 கார்கள் குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
Image Credit : Maruti Website

1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

இந்தியாவின் ஆல்-டைம் ஃபேவரேட் ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட், புதிய தலைமுறை இன்ஜின் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் மார்க்கெட்டில் கலக்கி வருகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட Z-சீரிஸ் இன்ஜின் மிக சிறப்பான மைலேஜை வழங்குகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சத்தில் தொடங்குகிறது. நடுத்தர குடும்பத்தினருக்கு இது ஒரு சிறந்த எரிபொருள் திறன் கொண்ட தேர்வாகும்.

36
2. டாடா பன்ச் (Tata Punch)
Image Credit : X@AarizRizvibasedauto

2. டாடா பன்ச் (Tata Punch)

இந்தியாவின் மிகப் பாதுகாப்பான மைக்ரோ எஸ்யூவி கார்களில் ஒன்றான டாடா பன்ச், க்ளோபல் NCAP விபத்து சோதனையில் 5 நட்சத்திர பாதுகாப்பு பெற்றுள்ளது. கரடுமுரடான இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலும், மிரட்டலான தோற்றத்துடனும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.6.13 லட்சமாகும். குடும்ப பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு இது முதன்மையான தேர்வாகும்.

46
3. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)
Image Credit : ‍X

3. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)

டாடா பன்ச் காருக்கு நேரடிப் போட்டியாக களமிறங்கிய ஹூண்டாய் எக்ஸ்டர், தனது பிரீமியம் கேபின் மற்றும் நவீன வசதிகளால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் வாய்ஸ் எனேபிள் சன்ரூஃப், டேஷ் கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.6.13 லட்சத்தில் தொடங்குகிறது.

56
4. மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)
Image Credit : maruti suzuki

4. மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

ரூபாய் 10 லட்சத்திற்குள் ஒரு முழுமையான காம்பேக்ட் எஸ்யூவி வாங்க விரும்பினால், பிரெஸ்ஸா சரியான சாய்ஸ். இதன் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், விசாலமான இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் வசதி ஆகியவை நீண்ட தூர பயணங்களை மிகவும் எளிதாக்குகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ.8.34 லட்சமாகும்.

66
5. ரெனால்ட் கைகர் (Renault Kiger)
Image Credit : Renault

5. ரெனால்ட் கைகர் (Renault Kiger)

பட்ஜெட் விலையில் டர்போ இன்ஜின் மற்றும் ஸ்போர்ட்டியான லுக்கை விரும்பும் இளைஞர்களை கைகர் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் பிரீமியம் டேஷ்போர்டு இதன் பலமாகும். இதன் விலை ரூ.6 லட்சத்தில் தொடங்குகிறது.

பட்ஜெட் விலையில் அதிக பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 5 கார்களும் இந்த ஆண்டின் மிகச்சிறந்த மற்றும் லாபகரமான முதலீடாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ செய்திகள்
கார் செய்தி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Electric Scooter Sales: 5.61 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை.. இந்த 4 நிறுவனங்கள் தான் மார்க்கெட்டை ஆளுது!
Recommended image2
மஹிந்திரா கார்களுக்கு எகிறும் மவுசு: செப்டம்பரில் 64,000 அதிகமான எஸ்யூவி கார்கள் விற்பனை!
Recommended image3
Honda Activa 125: ஆக்டிவா 125 வாங்கப் போறீங்களா? விலை, மைலேஜ், ஸ்மார்ட் கீ முதல் முழு வசதிகள் வரை இதோ!
Related Stories
Recommended image1
Budget Cars: டிராஃபிக்கில் டென்ஷன் வேண்டாம்.. ரூ.9 லட்சத்திற்குள் சூப்பர் ஆட்டோமேட்டிக் கார்கள்!
Recommended image2
மஹிந்திரா கார்களுக்கு எகிறும் மவுசு: செப்டம்பரில் 64,000 அதிகமான எஸ்யூவி கார்கள் விற்பனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved