MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • மஹிந்திரா கார்களுக்கு எகிறும் மவுசு: செப்டம்பரில் 64,000 அதிகமான எஸ்யூவி கார்கள் விற்பனை!

மஹிந்திரா கார்களுக்கு எகிறும் மவுசு: செப்டம்பரில் 64,000 அதிகமான எஸ்யூவி கார்கள் விற்பனை!

செப்டம்பரில் மஹிந்திரா எஸ்யூவி மற்றும் வாகன விற்பனை 15% வளர்ச்சி. எலக்ட்ரிக் கார்களின் புதிய மைல்கல் மற்றும் வரவிருக்கும் புதிய மாடல்கள் பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 02 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மஹிந்திரா கார்களுக்கான வரவேற்பு
Image Credit : X

மஹிந்திரா கார்களுக்கான வரவேற்பு

இந்தியாவில் மஹிந்திரா எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பரில் அந்நிறுவனம் 64,092 எஸ்யூவி மற்றும் பயன்பாட்டு பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14% உயர்ந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செப்டம்பர் மாத விற்பனை அறிக்கையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனையும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியையும் சேர்த்து செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 1,14,874 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 15% வளர்ச்சி பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விற்பனை விவரங்கள்
Image Credit : X

விற்பனை விவரங்கள்

இதில் முக்கியமாக பயணிகள் வாகனப் பிரிவில் இடம்பெறும் Utility Vehicles விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 56,233 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 64,092 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தப் பிரிவில் 14% வளர்ச்சி பதிவாகியுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களையும் சேர்த்து பார்க்கும்போது, மஹிந்திராவின் Utility Vehicles விற்பனை மேலும் வலுவான நிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 3,58,142 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2,97,570 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 20% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

34
வர்த்தக வாகனப் பிரிவில் மஹிந்திரா வளர்ச்சி
Image Credit : X

வர்த்தக வாகனப் பிரிவில் மஹிந்திரா வளர்ச்சி

வர்த்தக வாகனப் பிரிவிலும் மஹிந்திரா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டில் 30,420 வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 14% அதிகமாகும். குறிப்பாக 2 டன்னுக்கு குறைவான LCV விற்பனை 19 சதவீதமும், 2 முதல் 3.5 டன் வரையிலான LCV விற்பனை 13% உயர்ந்துள்ளன. 3 சக்கர வாகனங்களின் விற்பனையும் செப்டம்பர் மாதத்தில் 26% உயர்ந்து 16,343 யூனிட்டுகளாக இருந்தது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தப் பிரிவிஸ் வாகன விற்பனை 82,058 யூனிட்டுகளாகவும், வளர்ச்சி 53% உள்ளது.

இதற்கிடையே, மஹிந்திரா தனது மின்சார எஸ்யூவி மாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து Electric Origin SUV அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்களுக்கு இதுவரை 1 லட்சம் பில்லிங் செய்யப்பட்டுள்ளது என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளதாக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வர்த்தகப் பிரிவு தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

44
வாகன ஏற்றுமதியில் சாதனை
Image Credit : X

வாகன ஏற்றுமதியில் சாதனை

கடந்த செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா வாகன ஏற்றுமதி 4,019 யூனிட்டுகளாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7% சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 30,031 யூனிட்டுகளாக இருந்தது. இது முந்தைய நிதி ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 48% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை வலுவாக்கும் விதத்தில் அண்மையில் ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், தார் ஓஜி ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து புதிய பொலிரோ, விஷன் என்ற புதிய எஸ்யூவி மாடல்களையும் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் அளித்து வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளம், அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகளை வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda Activa 125: ஆக்டிவா 125 வாங்கப் போறீங்களா? விலை, மைலேஜ், ஸ்மார்ட் கீ முதல் முழு வசதிகள் வரை இதோ!
Recommended image2
எங்க திரும்பினாலும் இ-பைக், இ-ஆட்டோ... தினமும் இவ்ளோ பெட்ரோல் மிச்சமாகுதா? காற்று மாசுபாட்டுக்கும் 'குட்-பை'!
Recommended image3
Highway Driving Rules: ஓவர் டேக்கிங் டூ ஸ்பீடு லிமிட் வரை... ஹைவே டிரைவிங்-கில் யாரும் சொல்லாத 7 சேஃப்டி ரூல்ஸ்!
Related Stories
Recommended image1
Highway Driving Rules: ஓவர் டேக்கிங் டூ ஸ்பீடு லிமிட் வரை... ஹைவே டிரைவிங்-கில் யாரும் சொல்லாத 7 சேஃப்டி ரூல்ஸ்!
Recommended image2
எங்க திரும்பினாலும் இ-பைக், இ-ஆட்டோ... தினமும் இவ்ளோ பெட்ரோல் மிச்சமாகுதா? காற்று மாசுபாட்டுக்கும் 'குட்-பை'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved