- Home
- Auto
- Highway Driving Rules: ஓவர் டேக்கிங் டூ ஸ்பீடு லிமிட் வரை... ஹைவே டிரைவிங்-கில் யாரும் சொல்லாத 7 சேஃப்டி ரூல்ஸ்!
Highway Driving Rules: ஓவர் டேக்கிங் டூ ஸ்பீடு லிமிட் வரை... ஹைவே டிரைவிங்-கில் யாரும் சொல்லாத 7 சேஃப்டி ரூல்ஸ்!
Highway Driving Rules: ஹைவே டிரைவிங்கில் பண்ற சின்ன தப்பு பெரிய விபத்துக்கு காரணமாகலாம். முன்னால் செல்லும் காருக்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும்? செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறும் 7 முக்கிய விதிகளை பார்ப்போம்.

ஹைவே டிரைவிங்கில் கட்டாய 7 ரூல்ஸ்!
நெடுஞ்சாலையில் கார் ஓட்டுவது நகர சாலையில் ஓட்டுவதைவிட சற்று வித்தியாசமானது. அதிக வேகம், பல வழிகள், கனரக வாகனங்கள், திடீர் மாற்றங்கள், மழை, மூடுபனி போன்ற காரணங்களால் சிறிய தவறும் பெரிய விபத்துக்கு வழிவகுக்கலாம்.
ஆனால், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு விதிகள் பலருக்கும் தெரியாது. இந்தியாவின் Motor Vehicle Driving Regulations, 2017-ல் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பொதுவாக கவனிக்கப்படாத 7 முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம்.
1. முன்னால் செல்லும் வாகனத்துக்கு மிக அருகில் செல்லாதீர்கள்
நெடுஞ்சாலையில் வேகம் அதிகமாக இருப்பதால் முன்னால் செல்லும் வாகனத்துக்கும் உங்கள் காருக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். முன்னால் செல்லும் கார் திடீரென பிரேக் போட்டால், மிக அருகில் சென்றுகொண்டிருந்தால் உடனடியாக காரை நிறுத்த முடியாமல் போகலாம்.
MoRTH விதிகளின்படி, முன்னால் செல்லும் வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்தாலும் அல்லது நின்றாலும், பாதுகாப்பாக நிறுத்தக்கூடிய அளவு இடைவெளியை ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும். மழை, புயல் அல்லது மோசமான வானிலை நிலவும் நேரங்களில் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்க வேண்டும். வேகம் அதிகமாகும் போது முன்னால் இருக்கும் காரை நெருங்கிச் செல்ல வேண்டும் என்பது பாதுகாப்பான டிரைவிங் அல்ல.
2. ஓவர்டேக் செய்யும்போது இண்டிக்கேட்டர் மட்டும் போதாது!
நெஞ்சாலையில் வேகமாகச் செல்லும் போது பலர் முன்னால் இருக்கும் வாகனத்தை முந்துவதற்கு இண்டிகேட்டர் போட்டு உடனடியாக வழி மாற்றுகிறார்கள். ஆனால் விதிமுறைகளில் ஓவர் டேக்கிங் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுவாக வாகனத்தை வலது பக்கமாகத் தான் ஓவர்டேக் செய்ய வேண்டும். Multi-lane பாதையில் குறிப்பிட்ட பாதுகாப்பான சூழ்நிலைகளில் இடப்பக்கமாக முந்துவதற்கும் விதிவிலக்குகள் உள்ளன.
மேலும் முன்னால் இருக்கும் டிராபிக் நிலை தெளிவாக இல்லாதபோது ஓவர்டேக் செய்யக்கூடாது. Continuous solid line-ஐ கடந்து ஓவர்டேக் செய்யக்கூடாது. வளைவில் அல்லது முன்னால் தெளிவாகத் தெரியாத இடங்களில் ஓவர்டேக் செய்யக்கூடாது. Junction, Intersection, Pedestrian Crossing போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக்கூடாது. பள்ளி, மருத்துவமனை, கட்டுமான பணிகள் எனக் குறிப்பிடப்பட்ட பகுதிகளிலும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முக்கியமாக ஓவர்டேக் செய்த பிறகு பாதுகாப்பாக மீண்டும் இடதுபுற வழிக்கு திரும்ப வேண்டும்.
3. ஓவர்டேக் செய்யும்போது வேகத்தை அதிகரிக்காதீர்கள்!
ஒரு கார் உங்களை ஓவர்டேக் செய்யும்போது, நானும் வேகத்தை அதிகரித்து அவரை முன்னால் செல்ல விடக்கூடாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இது ஆபத்தானது. Motor Vehicle Driving Regulations படி, தன்னை ஓவர் டேக் செய்யும் வாகனத்தின் பாதுகாப்பான முந்துதலைத் தடுக்கவோ அல்லது அது மீண்டும் இடதுபுற Lane-க்கு திரும்புவதைத் தடுக்கவோ கூடாது. அதாவது யாராவது உங்களை ஓவர்டேக் செய்கிறார்கள் என்றால் அவருடன் போட்டி போடாதீர்கள். உங்கள் வேகத்தை நிலையாக வைத்துக்கொண்டு, தேவையற்ற acceleration செய்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.
4. நெடுஞ்சாலையில் வரும் வாகனத்துக்குத்தான் முன்னுரிமை
சர்வீஸ் சாலை அல்லது மற்றொரு சாலையிலிருந்து National Highway/State Highway-க்கு நுழையும்போது, நெடுஞ்சாலையில் ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். விதிமுறைகளின்படி, நெடுஞ்சாலையில் இணையும் வாகனம் ஏற்கனவே நெடுஞ்சாலையில் செல்லும் டிராபிக்கு Give Way செய்ய வேண்டும்.
Acceleration/Merging Lane இருந்தால், அதைப் பயன்படுத்தி தேவையான வேகத்தைப் பெற்ற பிறகு டிராபிக்கில் இணைய வேண்டும். அதற்கு முன்பும் இணையும்போதும் Rear-view மற்றும் Side-view Mirrors மூலம் Traffic-ஐ கவனித்து Indicator பயன்படுத்த வேண்டும். நெடுஞ்சாலையில் இடம் கிடைத்துவிட்டது என்று மட்டும் பார்த்து உடனடியாக வாகனத்தை உள்ளே திருப்புவது ஆபத்தானது.
5. மழையில் வழக்கமான வேகத்தில் ஓட்டாதீர்கள்
மழை பெய்யும்போது Road surface-ல் தண்ணீர் தேங்கலாம். பார்வைத்திறன் குறையலாம். Braking distance-ம் அதிகரிக்கக்கூடும். இதனால் மழை, புயல், கடுமையான வானிலை போன்ற சூழ்நிலைகளில் வாகனத்தை குறைந்த வேகத்தில் ஓட்டி, முன்னால் தெளிவாகத் தெரியும் தூரத்துக்குள் வாகனத்தை நிறுத்தக்கூடிய வேகத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று MoRTH விதிகள் கூறுகின்றன. மேலும், மோசமான வானிலையில் முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து வைத்திருக்கும் இடைவெளியை அதிகரிக்க வேண்டும். மழையில் முக்கியம்- குறைந்த வேகம் + அதிக இடைவெளி + அதிக கவனம் = பாதுகாப்பான பயணம்
6. சுரங்கப்பாதைக்குள் சென்றவுடன் 2 விஷயங்களை மறந்துவிடாதீர்கள்
நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் ஓட்டும்போது சில சிறப்பு விதிமுறைகள் உள்ளன. சுரங்கப்பாதைக்குள் நுழைவதற்கு முன்பு dipped/headlights பயன்படுத்த வேண்டும். மேலும் சுரங்கப்பாதைகளில் ஓவர்டேக் செய்யக்கூடாது.
U-Turn செய்யக்கூடாது. Reverse எடுக்கக் கூடாது. அவசர நிலை இல்லாமல் வாகனத்தை நிறுத்தவோ பார்க்கிங் செய்யவோ கூடாது. வாகனம் அவசரமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் Hazard Warning Lights பயன்படுத்த வேண்டும்; விதிகளில் குறிப்பிடப்பட்டபடி reflective warning triangles-ஐ வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் வைக்க வேண்டும். அதனால் சுரங்கப்பாதை என்பது வெறும் இருட்டான சாலை என்று நினைக்காமல், தனிப்பட்ட driving precautions தேவைப்படும் பகுதி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
7. வேக வரம்பு என்பது நிர்ணயிக்கப்பட்டது அல்ல!
நெடுஞ்சாலையில் பெரிய Speed Limit Board பார்த்தவுடன் அந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் வேகத்தை நிர்ணயிப்பதில் Road condition மட்டும் அல்லாமல் நெரிசல், வானிலை, பார்வைத்திறன், சாலையின் நிலை, வாகனத்தின் நிலை போன்ற காரணிகளையும் ஓட்டுநர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
MoRTH விதிகளின்படி, எப்போதும் வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கக்கூடிய வேகத்தில்தான் ஓட்ட வேண்டும். குறிப்பிட்ட ஸ்பீடு லிமிட்-ஐ மீறுவதும் கூடாது. உதாரணமாக, ஸ்பீடு லிமிட்டை 100 km/h என்றாலும், கனமழை காரணமாக Visibility மிகவும் குறைந்திருந்தால், 100 km/h வேகத்தில் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. ஸ்பீடு லிமிட்டை என்பது அதிகபட்ச சட்டபூர்வ வரம்பு; ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதையே அடைய வேண்டிய இலக்கு அல்ல.

