எலக்ட்ரிக் கார் விலை இவ்ளோ குறைஞ்சிருச்சா! புதுசா கார் வாங்குறவங்களுக்கு நிறைய ஆப்ஷன் இருக்கு!
எலக்ட்ரிக் கார்களில் பேட்டரி தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவமாக மாறத் தொடங்கியுள்ளதால், வாகன உற்பத்தியாளர்கள் சில மின்சார வாகனங்களின் விலையைக் குறைத்துள்ளன. அந்த வகையில் சமீபத்தில் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்ட நான்கு எலெக்ட்ரிக் கார்களின் விவரத்தைப் பார்க்கலாம்.
Tata Tiago EV
பேட்டரி தொழில்நுட்ப செலவுகள் குறைந்துள்ளதால் டாடா டியாகோ காரின் விலையை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 19.2 kWh பேட்டரியுடன் பேசிக் மாடலின் அதிகபட்ச விலையில் ரூ.70,000 குறைக்கப்பட்டுள்ளது.
Tata Nexon EV
டாடா டியாகோவுடன் டாடா நெக்ஸான் விலையும் குறைந்துள்ளது. மீடியம் ரேஞ்ச் மாடலின் விலை ரூ.35,000 குறைக்கப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் மாடல் ரூ.1.2 லட்சம் வரை விலைக் குறைப்பு கண்டுகள்ளன.
MG Comet EV
எம்.ஜி. நிறுவனம் சமீபத்தில் Comet EV உட்பட அதன் சில எலக்ட்ரிக் கார்களின் விலையைக் குறைத்தது. Comet EV ரூ.1.4 லட்சம் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் Comet EV இப்போது ரூ.6.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.8.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது.
MG ZS EV
MG ZS EV ரூ.3.9 லட்சம் வரை விலைக் குறைப்புக்கு கண்டுள்ளது. இந்தக் காரின் விலை குறைப்புக்கான குறிப்பிட்ட காரணத்தைக் கூறவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களைக் கவரும் உத்தியாக இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். இந்தக் கார் இப்போது ரூ. 18.98 லட்சம் முதல் ரூ. 25.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையான விலையில் கிடைக்கிறது.