ரூ.5.21 லட்சத்துக்கு வேன்.. ஈக்கோ விற்பனை ஏற காரணம் இதுதான்!
மாருதி சுசுகி ஈக்கோ வேன், குறைந்த விலை, குடும்பம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகத் திகழ்கிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

மாருதி ஈக்கோ வேன்
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் வேன் மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) தொடர்ந்து மக்கள் தேர்வாக இருந்து வருகிறது. குறைந்த விலை, குடும்பப் பயணம் மற்றும் வணிக தேவைக்கு ஏற்ற வடிவமைப்பு போன்ற அம்சங்களால் இந்த வேன் பிரபலமாக உள்ளது. தற்போதைய நிலையில், ஈக்கோவின் ஆரம்ப வேரியண்ட் விலை ரூ. 5.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈக்கோ எக்ஸ்-ஷோரூம் விலை
அதே நேரத்தில், இந்த வேனின் டாப் வேரியண்ட் விலை ரூ. 6.36 லட்சம் வரை செல்கிறது. இதனைத் தவிர, ஈக்கோ வரிசையில் Eeco Ambulance Shell மற்றும் Eeco Ambulance என்ற இரண்டு சிறப்பு வேரியண்ட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 6.37 லட்சம் மற்றும் ரூ. 8.02 லட்சம் ஆக உள்ளது. இந்த விலை விவரங்கள் அனைத்தும் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஈக்கோ 5 சீட்டர் 6 சீட்டர்
மாருதி சுசுகி ஈக்கோ வேன், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் வேரியண்ட்கள் 3 பயணிகள் மற்றும் 1 நோயாளி என 4 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் அதிக பயணிகளைக் கொண்டு செல்லும் வசதி இதன் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
ர் மாருதி ஈக்கோ ஆம்புலன்ஸ் வேரியண்ட்
மேலும், ஈக்கோவின் CNG வேரியண்ட்கள் ஒரு கிலோ 26.8 கிமீ வரை மைலேஜ் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை ARAI அளவீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக மைலேஜ் நாடும் வாடிக்கையாளர்களிடையே ஈக்கோவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
மாருதி ஈக்கோ விற்பனை
இந்த வரவேற்பு விற்பனையிலும் தெளிவாக தெரிகிறது. 2025 டிசம்பர் மாதத்தில் 11,899 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 டிசம்பரில் இது 11,678 யூனிட்கள் மட்டுமே. அதாவது ஆண்டு ஒப்பீட்டில் 221 யூனிட்கள் அதிகரிப்பு. மேலும் 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 1,04,902 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு இதே காலத்தின் 1,02,520 யூனிட்களை விட 2,382 யூனிட்கள் உயர் பதிவு ஆகும்.

