செல்டோஸ், கிரெட்டாவுக்கு தூக்கமே போச்சு? நிசான் டெக்டான் வருது! என்ன ஸ்பெஷல்?
நிசான் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி 'டெக்டான்' மாடலை பிப்ரவரி 4-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்குப் போட்டியாக வருகிறது.

இந்திய மிட்-சைஸ் எஸ்யூவி சந்தையில் போட்டி மேலும் தீவிரமடையும் நிலையில், நிசான் தனது புதிய எஸ்யூவி ‘நிசான் டெக்டான்’ மாடலை வரும் பிப்ரவரி 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிரபல மாடல்களுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தனது நிலையை மீண்டும் வலுப்படுத்த நிசானுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பில், நிசான் டெக்டான் ஒரு வலுவான மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் பெரிய V-மோஷன் கிரில், கூர்மையான LED ஹெட்லெம்ப்கள் மற்றும் DRL லைட்கள் இடம்பெற்றுள்ளன. பக்கவாட்டில் அகலமான வீல் ஆர்ச்கள், டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ஸ்போர்ட்டி ரூஃப்லைன் கொடுக்கப்படலாம். பின்புறத்தில் LED டெயில் லேம்ப்கள் மற்றும் தைரியமான பம்பர் வடிவமைப்பு இடம்பெற்றது, எஸ்யூவிக்கு முழுமையான மஸ்குலர் லுக் வழங்கும்.
உட்புறத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ADAS தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் வழங்கப்படலாம்.
இன்ஜின் தேர்வுகளில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், மைல்டு அல்லது ஸ்ட்ராங் ஹைப்ரிட் விருப்பமும் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இருக்கும். விலையைப் பார்க்கும்போது, நிசான் டெக்டான் ரூ.11 லட்சம் முதல் ரூ.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் அறிமுகமாகலாம். இந்த விலைப் பிரிவில், போட்டி மாடல்களுடன் நேரடியாக மோத நிசான் தயாராகியுள்ளது.

