MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • CM Vijay: ஹூண்டாய் கண்ணில் பட்ட தமிழ்நாடு.. அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம் போட்ட முதல்வர் விஜய்

CM Vijay: ஹூண்டாய் கண்ணில் பட்ட தமிழ்நாடு.. அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம் போட்ட முதல்வர் விஜய்

CM Vijay Hyundai Tamil Nadu Investment: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாநிலத்தை இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 05 2026, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ்நாட்டில் ஹூண்டாய் ரூ.26,000 கோடி முதலீடு
Image Credit : Instagram

தமிழ்நாட்டில் ஹூண்டாய் ரூ.26,000 கோடி முதலீடு

இந்தியாவின் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, தமிழ்நாட்டை தனது முக்கிய இவி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. வெறும் புதிய கார் அறிமுகம், உற்பத்தி, பேட்டரி தொழில்நுட்பம், உதிரிபாகங்கள் மற்றும் திறன் மேம்பாடு வரை இந்த முயற்சி, மாநிலத்தின் தொழில் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹூண்டாய் மின்சார கார் உற்பத்தி திட்டம்
Image Credit : Instagram

ஹூண்டாய் மின்சார கார் உற்பத்தி திட்டம்

சென்னையில் வரும் தனது உற்பத்தி மையத்தை கொண்டு, இந்த ஆண்டிலேயே இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய ஹூண்டாய் தயாராகி வருகிறது. இதில் பொதுமக்களை இலக்காகக் கொண்ட புதிய மின்சார கார் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இவிகளுக்குத் தேவையான பேட்டரி துணை அசெம்பிளி வசதிகளும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

35
முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
Image Credit : Instagram

முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே. தற்போது சுமார் 82 சதவீதமாக உள்ள உள்நாட்டு உதிரிபாக ஆப், அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் பேட்டரி, முக்கிய எலக்ட்ரானிக் கூறுகள் மற்றும் பிற அத்தியாவசிய பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் சூழல் உருவாகும்.

45
2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஹூண்டாய்
Image Credit : stockPhoto

2000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஹூண்டாய்

இதன் தாக்கம் தொழிற்துறையில் மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளிலும் எதிரொலிக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சப்ளையர்களிடமிருந்து கூடுதல் கொள்முதல் செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வணிக வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 2,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

55
ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடு
Image Credit : Google

ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடு

2023 முதல் 2032 வரை ரூ.26,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யும் திட்டத்தை ஹூண்டாய் ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜயை சந்தித்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனுடன், மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் AI அடிப்படையிலான உற்பத்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு, இந்தியாவின் அடுத்த தலைமுறை வாகன உற்பத்தி மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தொழில் வட்டாரங்கள் கருதுகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹூண்டாய்
ஹூண்டாய் கார்
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்ஜின் டூ டயர் வரை: செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் முன் நீங்க கட்டாயம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!
Recommended image2
Best Car Under 4 Lakh: ரூ.4 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? 33.4 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார்!
Recommended image3
Cheapest Bikes: ரூ.58,000 முதல் கிடைக்கும் 5 மலிவு பைக்குகள்! மைலேஜ் அதிகம்.! விலையோ குறைவு.!
Related Stories
Recommended image1
ரூ.5 லட்சத்துக்குள் 360° கேமரா...டாடா காரில் எல்இடி லைட் முதல் 6 ஏர்பேக் வரை செம அப்டேட்!
Recommended image2
Tata Motors EV : டாடா இவி வாங்குறவங்க கவனிக்கவும்... அடுத்த 3 மாதம் முக்கியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved