ஒரே சார்ஜில் 500 கி.மீ.க்கு மேல் பயணிக்கலாம்! வெற லெவல் ரேஞ்ச் கொடுக்கும் எலெக்ட்ரிக் கார்கள்!
எரிபொருள் செலவைச் சேமிக்கலாம் என்பதும் எலக்ட்ரிக் கார்களை வாங்க முக்கியமான காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணிக்கக்கூடிய டாப் எலெக்ட்ரிக் SUV கார்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
electric vehicle, electric SUV, electric cars, longest range,
மின்சார வாகனச் சந்தை உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. இது பயணிகள் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் போக்கு என வல்லுநர்கள் கருதுகின்றனர். மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களைத் வாங்குவது சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வது மட்டுமின்றி, பல நவீன அம்சங்களின் பலனையும் கொடுக்கிறது. எரிபொருள் செலவைச் சேமிக்கலாம் என்பதும் எலக்ட்ரிக் கார்களை வாங்க முக்கியமான காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணிக்கக்கூடிய டாப் எலெக்ட்ரிக் SUV கார்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Chevrolet Equinox EV
செவ்ரோலெட் ஈக்வினாக்ஸ் EV (Chevrolet Equinox EV) ஃபிரண்ட் வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டு வேரியண்ட்களைக் கொண்டது. FWD மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 513 கிமீ வரை பயணிக்கலாம்.
Chevrolet Blazer EV
செவர்லேட் பிளேஸர் EV (Chevrolet Blazer EV) உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார SUV கார்களில் ஒன்றாகும். இதுவும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 513 கிமீ தூரம் பயணிக்கும்.
Tesla Model X
டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி (Tesla Model X SUV) அதன் தனித்துவமான வடிவமைப்பிற்கு பெயர் பெற்றது. இரட்டை எஞ்சின் AWD அமைப்பு, ஸ்போர்ட்டியான 20-இன்ச் வீல் ஆகியவற்றைக் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒருமுறை சார்ஜ் செய்தால் 524 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
Mercedes-Benz EQS SUV
மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எலெக்ட்ரிக் எஸ்யூவி மிகவும் விசாலமான இரண்டாவது வரிசை சீட்டிங் மற்றும் அதிக ஸ்டோரேஜ் இடத்துடன் மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. இந்த எஸ்யூவி ஒருமுறை சார்ஜ் செய்தால் 545 கிமீ வரை செல்லும்.
Rivian R1S
ரிவியன் ஆர்1எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உலகிலேயே மிக நீண்ட தூரம் இடைவிடாமல் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார். மூன்று வரிசை இருக்கை கொண்ட இந்த சொகுசான வாகனம் பல அதிநவீன அம்சங்களை உள்ளடக்கியது. இது அபாரமான ரேஞ்ச் கொடுக்கும் கார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 659 கிமீ வரை நான்ஸ்டாப்பாக பயணிக்கும்.