வெறும் ரூ.5 லட்சம் போதும்: கம்மி விலையில் குவிந்து கிடக்கும் மைலேஜ் கார்கள்
குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் கார்களைத் தேடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி. 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவான விலையில் கிடைக்கும் மாருதி சுசூகி ஆல்டோ K10, செலிரியோ, எஸ்-பிரஸ்ஸோ, டாடா டியாகோ உள்ளிட்ட சிறந்த கார்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

வெறும் ரூ.5 லட்சம் போதும்: கம்மி விலையில் குவிந்து கிடக்கும் மைலேஜ் கார்கள்
நல்ல மைலேஜ் தரும், விலை குறைவான காரை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது பலரின் கனவு. அதிக விலை காரணமாக, மலிவு விலையில் கிடைக்கும் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகிறார்கள். இந்திய சந்தையில் அப்படி பல விதமான கார்கள் உள்ளன. நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த விலை காரணமாக அவை பலருக்கும் ஏற்றதாக இருக்கும். ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான விலையில் கிடைக்கும் அத்தகைய கார்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியாவில் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் கார்கள் எவை என்று பார்ப்போம்.
சிறந்த மைலேஜ் கார்
மாருதி சுசூகி ஆல்டோ K10
முதலில் பார்க்கப்போவது மாருதி சுசூகி ஆல்டோ K10. அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. ஆல்டோ K10-ல் 1 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 67PS பவரையும் 89Nm டார்க்கையும் உருவாக்கும். இதில் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீட் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது. இது CNG வகையிலும் கிடைக்கிறது. இதில் ஐடில்-எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 4.09 லட்சம் ரூபாய்.
பட்ஜெட் கார்
மாருதி சுசூகி செலிரியோ
மாருதி சுசூகி செலிரியோ மலிவு விலை கார்களில் ஒரு சிறந்த தேர்வாகும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் செலிரியோ வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 bhp பவரையும் 89 nm டார்க்கையும் உருவாக்கும். செலிரியோவின் ஆரம்ப விலை 5.36 லட்சம் ரூபாய். இந்திய சந்தையில் மொத்தம் நான்கு வகைகளில் இது கிடைக்கிறது.
சிறந்த ஃபேமிலி கார்
மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ
உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருந்தும் மற்றொரு கார் மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ. இந்த கார் நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் ஒன்று. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 4.26 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஆல்டோ K10-ல் உள்ள அதே எஞ்சின் தான் எஸ்-பிரஸ்ஸோவிலும் உள்ளது. இந்த காரின் அடிப்படை வகை ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறைவான விலையில் கிடைக்கிறது. எஸ் பிரஸ்ஸோவில் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 68PS பவரையும் 90Nm டார்க்கையும் உருவாக்குகிறது.
பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ்
டாடா டியாகோ
டாடா டியாகோ உங்கள் பட்ஜெட்டுக்குள் சரியாகப் பொருந்தும். இந்த டாடா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 86 bhp பவரையும் 113 nm டார்க்கையும் உருவாக்கும். டியாகோவில் CNG வகையும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் 4.99 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் டாடா டியாகோ கிடைக்கிறது.