ரூ.55 ஆயிரம் மட்டுமே.. பெண்களுக்கான குறைந்த விலை ஸ்கூட்டர்கள்.. லைசென்ஸ் வேண்டாம்
பெண்கள் பயன்படுத்த வசதியான, எடை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த எடை, ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்கலாம்.

பெண்களுக்கான ஸ்கூட்டர்கள்
மின்சார இரு சக்கர வாகனங்களின் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெண்கள் பயன்படுத்த உகந்த லைட் வெயிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. குறைந்த கிலோ உயரம், ஸ்டைலிஷ் லுக், நகரப் பயணத்திற்கு ஏற்ற சக்தி, மற்றும் பட்ஜெட்டுக்குள் கிடைப்பது போன்ற பல அம்சங்கள் காரணமாக, இந்த வகை ஸ்கூட்டர்களை பெண்கள் பெருமளவில் தேர்வு செய்து வருகிறார்கள்.
குறைந்த விலை
இந்த வரிசையில் முதலில் குறிப்பிட வேண்டியது Zelio Little Gracie ஸ்கூட்டர் ஆகும். வெறும் 80 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த மாடல், நெரிசலிலும் பெண்கள் நம்பிக்கையுடன் ஓட்டக்கூடிய வகையில் உள்ளது. ஒரு சார்ஜில் 60 முதல் 90 கிமீ வரை பயணம் செய்யும் சக்தி கொண்டது. சென்டர் லாக், USB சார்ஜிங், மற்றும் லைசென்ஸ் தேவையில்லாத அம்சம் பெண்களுக்கு எளிதான பயன்பாடுகளை வழங்குகிறது. விலை சுமார் ரூ. 55,000 - 60,000.
லைட் வெயிட் ஸ்கூட்டர்
அடுத்து இந்த பட்டியலில் இருப்பது Okinawa Lite ஆகும். நகரப் பயணத்திற்கே பொருத்தமான ஒரு மாடல் ஆகும். 1.25 kWh பேட்டரி மூலம் 60 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. 25 கிமீ மேக்ஸ் ஸ்பீட், 740 மிமீ சீட் உயரம் என்பதால் பெண்களுக்கு எளிதாக கையாளக்கூடியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 69,093. அதே நேரத்தில் ஆம்பியர் மேக்னஸ் EX நீண்ட ரேஞ்ச் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வு.
பெண்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 121 கிமீ ARAI ரேஞ்ச், 82 கிலோ எடை மற்றும் 'லிம்ப் ஹோம்' வசதி போன்றவை இந்த மாடலை சிறப்பாக்குகின்றன. விலை ரூ. 67,999 முதல் 94,900 வரை. லைட் வெயிட், பட்ஜெட்டுக்குள் மற்றும் தினசரி பயணத்திற்கான வசதிகளுடன் கிடைக்கும் மேற்கண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெண்களுக்கு சிறந்த தேர்வுகளாக உள்ளது.

