20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?
சமீபத்தில் அறிமுகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வெறும் 20 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அது எந்த ஸ்கூட்டர், அவற்றின் மாடல் என்ன? போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அறிமுகமான ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. வெறும் 20 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ரிஸ்டாவின் வெற்றி ஏதர் நிறுவனத்தின் முகத்தையே மாற்றியுள்ளது. தற்போது ஏதரின் மொத்த விற்பனையில் 70% ரிஸ்டா ஸ்கூட்டரில் இருந்து வருகிறது. இது ஏதரை நாட்டின் டாப் 3 பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. ரிஸ்டாவின் தாக்கத்தால், ஏதர் தனது வர்த்தகத்தை தென்னிந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், மத்திய மற்றும் வட இந்தியாவிலும் விரிவுபடுத்தியுள்ளது.
ரிஸ்டா ஸ்கூட்டர் அம்சங்கள்
தற்போது நாடு முழுவதும் 524 டீலர்ஷிப்கள் உள்ளன. ஏதர் ரிஸ்டா 2 டிரிம்கள் மற்றும் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
- 2.9 kWh பேட்டரி – 123 கி.மீ
- 3.7 kWh பேட்டரி – 159 கி.மீ
வேரியண்ட்கள்
- ரிஸ்டா S
- ரிஸ்டா Z
ஆரம்ப விலை ரூ. 1.15 லட்சம். 56 லிட்டர் ஸ்டோரேஜ், ஸ்கிட் கண்ட்ரோல், 7-இன்ச் ஸ்கிரீன், மணிக்கு 80 கி.மீ டாப் ஸ்பீடு போன்ற அம்சங்கள் உள்ளன. 4.7 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டும்.

