சாமானிய மக்களுக்கான புதிய எலக்ட்ரிக் கார்; ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில்
நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கேஜி மோட்டார்ஸ், மிபோட் என்ற ஒற்றை இருக்கை கொண்ட புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், ஒற்றை சார்ஜில் 100 கி.மீ வரை செல்லும்.

6 லட்சத்திற்கும் குறைவான விலையில் மின்சார கார்
நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஜப்பானிய நிறுவனமான கேஜி மோட்டார்ஸ் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மிபோட் எனப்படும் இந்த கார் ஒற்றை இருக்கை கொண்டது. "மொபிலிட்டி ரோபோ" என்பதே இதன் பொருள். ஹிரோஷிமாவை தலைமையிடமாகக் கொண்ட கேஜி மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிபோட், வழக்கமான கார்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
100 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட EV
இது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் கோல்ஃப் கார்ட் போல தோற்றமளிக்கிறது. 7,000 டாலர் (சுமார் ரூ.5.98 லட்சம்) விலையுள்ள இந்த கார், 1,500 மி.மீ உயரம் கொண்டது. ஒற்றை சார்ஜில் 100 கி.மீ வரை செல்லும். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகும். செயல்திறனை விட திறனுக்கே முன்னுரிமை அளிப்பதாக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கசுனாரி குசுனோகி தெரிவித்தார்.
மிபோட் மின்சார கார்
ஜப்பானில் பிரபலமான நிசான் சகுரா மின்சார காரின் பாதி விலையில் இது கிடைக்கிறது. 2025 அக்டோபரில் மிபோட் காரின் உற்பத்தியை தொடங்க கேஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. 3,300 யூனிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. 2027 மார்ச் மாதத்திற்குள் அனைத்து வாகனங்களையும் டெலிவரி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பட்ஜெட் மின்சார வாகனம்
ஜப்பானின் நெரிசலான சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்வதை கருத்தில் கொண்டுதான் இந்த காரை வடிவமைத்ததாக குசுனோகி தெரிவித்தார். நெரிசலான இடங்களில் சிறிய, கச்சிதமான வாகனங்களே சிறந்த தீர்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.