இந்தியர்கள் செம வெயிட்டிங்..! 2026ல் இந்தியாவில் வரவிருக்கும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள்..!
2026-ம் ஆண்டு இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது. மாருதி சுசுகி, டாடா, கியா, மற்றும் டொயோட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த உள்ளன.

2026 எலக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மீது உள்ள ஆர்வம் வருடந்தோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2026 ஆண்டு எலக்ட்ரிக் வாகன சந்தைக்கு ஒரு திருப்புமுனையாகக்கூடும். முன்னணி இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல புதிய எலக்ட்ரிக் கார்கள், எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. குறிப்பாக விலை, ரெஞ்ச், அம்சங்கள் ஆகியவற்றில் வாங்குபவர்களுக்கு அதிக தேர்வுகள் கிடைக்கும் ஆண்டாக 2026 பார்க்கப்படுகிறது. 2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் பற்றி பார்ப்போம்.
வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்
முதலிடத்தில் மாருதி சுசுகி இ-விட்டாரா உள்ளது. 2026 ஜனவரியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி, ரூ.20–25 லட்சம் வரம்பில் வரும் என கணிக்கப்படுகிறது. 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி விருப்பங்களுடன், 344 கிமீ முதல் 543 கிமீ வரை ரேஞ்ச் தரும் திறன் இதன் முக்கிய பலம். AWD பதிப்பு கிடைக்கும் என்பதால், இது பிரீமியம் EV வாங்குபவர்களை ஈர்க்கும்.
எலக்ட்ரிக் எஸ்யூவி
இரண்டாவது இடத்தில் டாடா சியரா இவி உள்ளது. டாடா நிறுவனம் இந்த மாதலை முதலில் எலக்ட்ரிக் பதிப்பாகவே வெளியிட முடிவு செய்துள்ளது. 55 kWh மற்றும் 65 kWh பேட்டரி பேக்குகள், சுமார் 500 கிமீ ரேஞ்ச், ஆல்-வீல் டிரைவ் விருப்பம் போன்றவை இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. ரூ.20 லட்சம் முதல் விலை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இது மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் முக்கிய போட்டியாளராக இருக்கும்.
டாடா அவின்யா
மூன்றாவது முக்கிய மாடல் டாடா அவின்யா. இது ஒரு சாதாரண கார் அல்ல; டாடாவின் புதிய பிரீமியம் EV அடையாளமாக உருவாகிறது. 500+ கிமீ ரேஞ்ச், அதிவேக சார்ஜிங், V2L, V2V தொழில்நுட்பங்கள், உயர்தர இன்டீரியர் போன்ற அம்சங்கள் இதில் இருக்கும். 2026 இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கியா சிரோஸ் இவி
நான்காவது இடத்தில் கியா சிரோஸ் இவி உள்ளது. 2026 தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி விருப்பங்களுடன் வரலாம். டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா XUV400 போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும்.
டொயோட்டா அர்பன் குரூஸர்
ஐந்தாவது இடத்தில் டொயோட்டா அர்பன் குரூஸர் இவி உள்ளது. இது மாருதி இ-விட்டாராவின் டொயோட்டா பேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருக்கும். 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி, AWD விருப்பம் மற்றும் 550 கிமீ-க்கும் அதிகமான ரேஞ்ச் இதன் முக்கிய அம்சங்கள். 2026-ன் முதல் பாதியில் இந்திய சந்தையில் வர வாய்ப்புள்ளது.

