MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 4 ராசிக்காரங்க எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுந்து வருவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Astrology: இந்த 4 ராசிக்காரங்க எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுந்து வருவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Zodiac signs who work hard to make their dreams come true: சில ராசியில் பிறந்தவர்கள் தங்களது இலக்கை அடையும் வரை சோர்வடையாமல் முயற்சி செய்து கொண்டே இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Ramprasath S
Published : Nov 25 2025, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விடாமுயற்சி செய்யும் 4 ராசிக்காரர்கள்
Image Credit : Asianet News

விடாமுயற்சி செய்யும் 4 ராசிக்காரர்கள்

சில ராசிக்காரர்கள் தங்கள் லட்சியங்களை அடைவதில் அசைக்க முடியாத உறுதியுடனும், விடாமுயற்சியுடன் இருப்பார்களாம். எத்தனை தோல்விகள் வந்தாலும் அதை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தங்கள் கனவுகளை நினைவாக்குவதில் முனைப்புடன் செயல்படுவார்களாம். அப்படி விடாமுயற்சியின் சிகரங்களாக திகழும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்கள் துணிச்சல் மிக்கவர்கள். இவர்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்களின் விடாமுயற்சி என்பது இவர்களுக்கு துவண்டு போகாத உற்சாகத்தைத் தருகிறது. 
  • ஒரு கனவு அல்லது யோசனை தோன்றியவுடன் அதை செயல்படுத்த முதல் அடியை எடுத்து வைத்து விடுவார்கள். மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் வேலையைத் தொடங்கி விடுவார்கள். 
  • சவால்கள் மற்றும் தடைகள் இவர்களுக்கு எரிச்சலூட்டினாலும் அதுவே இவர்களுக்கு உந்து சக்தியாக மாறும். ‘முடியாது’ என்று யாராவது சொன்னால், அதை சாதித்து காட்ட வேண்டும் என்பதே இவர்களின் இலக்காகி விடும். 
  • தங்கள் இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் ஆற்றல் இவர்களிடம் மிகுதியாக இருக்கும். இலக்கை அடைவதற்கான பாதையில் ஏற்படும் எந்த தடையையும் இவர்கள் தைரியத்துடன் எதிர்கொள்வார்கள். இலக்கில் இருந்து ஒருபோதும் விலக மாட்டார்கள்.

Related Articles

Related image1
Astrology: புத்தாண்டில் மகரத்தில் உதிக்கும் சுக்கிர பகவான்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Related image2
Astrology: பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! நவ 23 முதல் 5 ராசிகளின் வாழ்வில் புயல் வீசப் போகுது.!
35
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்கள் உறுதி, ஸ்திரத்தன்மை மற்றும் அசைக்க முடியாத மன உறுதிக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களைப் பொறுத்தவரை ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை முடிக்கும் வரை பின்வாங்க மாட்டார்கள். 
  • இவர்களின் குறியீடு காளையாகும். காளை எப்படி வயலில் உழுவதை நிறுத்தாமல் தொடர்ந்து உழைக்குமோ, அதேபோல் ரிஷப ராசிக்காரர்களும் தங்கள் லட்சியங்களுக்காக தொடர்ந்து உழைப்பார்கள். 
  • இவர்களின் பிடிவாத குணம் சில சமயங்களில் எதிர்மறையாக பார்க்கப்பட்டாலும், அதுவே அவர்களின் பலமாகும். தாங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் ஒரே எண்ணத்துடன் உறுதியாக இருப்பார்கள். 
  • இவர்கள் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதில்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருந்து, தங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்வதில் உறுதியாக இருப்பார்கள்.
45
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். தீவிரமான மன உறுதி கொண்டவர்கள். இவர்களின் விடாமுயற்சி என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் மனதில் இருந்து ஒரு சக்தி போல எழும். 
  • ஒரு கனவு அல்லது இலக்கை தேர்ந்தெடுத்து விட்டால் அதோடு உணர்ச்சிப்பூர்வமாக பிணைந்து விடுவார்கள். இந்த தீவிர ஈடுபாடு எவ்வளவு சோர்வு வந்தாலும், தொடர்ந்து உழைப்பதற்கான உந்து சக்தியாக அமைகிறது. 
  • இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும் தோல்விகளையும் சந்திப்பார்கள். ஆனால் ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு எழுந்து பன்மடங்கு வலிமையோடு தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பார்கள். 
  • தங்கள் உழைப்பையும், திட்டங்களையும் பற்றி வெளிப்படையாக பேசாமல் அமைதியாக இருந்து காரியங்களை சாதித்து முடிவுகள் மூலம் தங்கள் வெற்றியைப் பேசுவார்கள்.
55
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

  • மகர ராசிக்காரர்கள் நடைமுறைவாதிகள், ஒழுங்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மற்றும் மிகுந்த லட்சியம் கொண்டவர்கள். இவர்களின் விடாமுயற்சியானது மலையையே நகர்த்தும் அளவிற்கு வலிமையானது. 
  • இவர்களின் குறிக்கோள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த இலக்குகளை அடையும்வரை அவர்கள் ஓய்வெடுப்பதில்லை. இவர்கள் அவசரப்பட மாட்டார்கள். 
  • நீண்ட கால திட்டங்களை வகுத்து ஒவ்வொரு அடியையும் நிதானத்துடனும், பொறுமையுடனும் எடுத்து வைப்பார்கள். இவர்கள் தங்கள் கனவை பெரிய கட்டிடமாக கருதுகிறார்கள். அதை உறுதியான அஸ்திவாரத்துடன் மெதுவாக கட்டுகிறார்கள். 
  • இவர்களுக்கு தோல்வி என்பது முடிவல்ல. அது ஒரு திருப்புமுனை. ஏற்பட்ட தவறுகளை கண்டறிந்து அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஞ்சத்தனமா இருப்பாங்களாம்.! ஒரு ரூபாயை கூட யோசிச்சு செலவு பண்ணுவாங்களாம்.!
Recommended image2
Astrology: உண்மையாக காதலிக்கும் 4 ராசிக்காரர்கள்.! காதலுக்காக எதையும் தியாகம் செய்வாங்களாம்.!
Recommended image3
Astrology: சனி பகவானில் வீட்டில் ஒன்று சேரும் நண்பர்கள்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!
Related Stories
Recommended image1
Astrology: புத்தாண்டில் மகரத்தில் உதிக்கும் சுக்கிர பகவான்.! 2026 முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Recommended image2
Astrology: பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! நவ 23 முதல் 5 ராசிகளின் வாழ்வில் புயல் வீசப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved