- Home
- Astrology
- Astrology: பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! நவ 23 முதல் 5 ராசிகளின் வாழ்வில் புயல் வீசப் போகுது.!
Astrology: பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! நவ 23 முதல் 5 ராசிகளின் வாழ்வில் புயல் வீசப் போகுது.!
Budh Vakri 2025 in Libra: நவம்பர் 23, 2025 புதன் பகவான் தனது வக்ர பயணத்தை தொடங்க இருக்கிறார். புதனின் வக்ர பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

புதன் வக்ர பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் புத்திசாலித்தனம், பேச்சு, அறிவு, படிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவரின் வக்ர பெயர்ச்சி அதாவது பிற்போக்கு நிலையில் இருக்கும் பொழுது தவறான புரிதல்கள், உரையாடல்களில் தடைகள், நிதி மற்றும் தொழிலில் இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.
துலாம் ராசியில் வக்ர பயணத்தைத் தொடங்கிய புதன்
கிரகங்களின் பிற்போக்கு இயக்கம் என்பது பூமியிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு கிரகம் அதன் இயல்பான பாதையில் இருந்து பின்னோக்கி நகர்வது போல் தோற்றத்தை குறிக்கிறது. புதன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை பிற்போக்கு இயக்கத்திற்கு செல்கிறது.
இந்த ஆண்டு நவம்பர் 23 அன்று மாலை 7:58 மணிக்கு துலாம் ராசியில் பிற்போக்கு நிலையில் (வக்ர பெயர்ச்சி) இயக்கத்தை தொடங்குகிறது. புதனின் இந்த பிற்போக்கு இயக்கத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
- புதனின் இந்த வக்ர பெயர்ச்சியின் பொழுது மேஷ ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புதன் பகவான் வக்ர நிலையில் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக நிதி மற்றும் தொழிலில் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
- வேலையில் அதிக தவறுகளை செய்யும் சூழல் ஏற்படலாம். மேல் அதிகாரிகளிடமிருந்து சிலர் அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும். வேலையை சரியாக முடிக்க முடியாமல் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பணிச்சுமையை கையாள முடியாமல் தொழில் மாறுதல் குறித்து யோசிப்பீர்கள்.
- வணிகம் செய்து வருபவர்களுக்கு புதிய போட்டியாளர்கள் உருவாவதால் வருமானம் ஈட்டுவதற்கும், லாபம் பெறுவதற்கும் போராட வேண்டிய சூழல் ஏற்படலாம். இதன் காரணமாக கடன் வாங்க வேண்டிய கட்டாயமும் உருவாகலாம்.
- எனவே மேஷ ராசியினர் நவம்பர் 23 தொடங்கி அடுத்த சில தினங்களுக்கு மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். காரியங்களில் வெற்றி பெற சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்.
2.ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இது சாதகமான சூழல் கிடையாது. இந்த காலகட்டத்தில் நீங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் இழப்புகளை சந்திக்கும் சூழல் உருவாகும்.
- தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கைக்கு வராமல் போகக்கூடும். தொழில் செய்து வருபவர்கள் போதுமான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் சிக்கிக் கொள்வீர்கள்.
- வணிகத்தில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். கடும் நிதி நெருக்கடியுடன் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். இது போன்ற சூழலில் உங்கள் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பட்ஜெட்டை திட்டமிடுவதும், நிதி சார்ந்த திட்டமிடலும் அவசியம்.
- இந்த சவாலான காலகட்டத்தில் இருந்து விடுபட பசு நெய்யால் தினமும் ஆலயத்தில் தீபம் ஏற்ற வேண்டியது அவசியம்.
3.கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி சில சவால்களை ஏற்படுத்தும். சொத்து, நிலம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
- தாயாரின் உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். முன்பு இருந்த பழைய உடல் நலக்கோளாறுகள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
- குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- இது போன்ற சூழ்நிலைகளில் அவசரத்தை தவிர்த்து, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பொறுமையாகவும் நிதானமாகவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
- குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க வேண்டியது முக்கியம். ஏற்படும் தடைகளில் இருந்து நிவாரணம் பெற துர்க்கை அம்மனை வழிபடுங்கள்.
4.விருச்சிகம்
- புதனின் வக்ர பெயர்ச்சியின் பொழுது விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் உங்கள் பணிகளை நீங்களே முடிக்க வேண்டிய சூழல் இருக்கும்.
- மற்றவர்களை சார்ந்து இல்லாமல் உங்கள் முயற்சிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். எனவே இந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. மனதை ஒருமுகப்படுத்தி கவனமாக வேலைகளை முடிக்க வேண்டும்.
- இந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகளிலும் சாதகமான சூழல் ஏற்படாது. சில காரணங்களால் உறவுகளில் பிரிதல் ஏற்படலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
- சிறு பிரச்சனைகள் கூட பெரிதாகி சிரமங்களை ஏற்படுத்தலாம். எனவே உடல் நலம் மற்றும் உறவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
5. மீனம்
- புதனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் தொழில் செய்து வருபவராக இருந்தால் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.
- மன அழுத்தம் காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படக்கூடும் நவம்பர் 23 தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும்.
- வணிகத்துடன் தொடர்புடைய மீன ராசிக்காரர்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எதிரிகள் உங்களை பின்னுக்குத் தள்ளி வேகமாக முன்னேறக்கூடும். பண விஷயங்களை நிர்வகிக்க முடியாமல் நிதி இழப்புகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிடலாம்.
- நிதி நிலைமையில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க கடன் வாங்கும் சூழலும் உண்டாகலாம். வாழ்க்கையில் உண்டாகும் தடைகள் நீங்க விநாயகர் வழிபாடு உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

