- Home
- Astrology
- Astrology: சனி பகவான் வீட்டிற்குள் நுழையும் சுக்கிரன்.! 2026 முதல் கோடிகளில் புரளப்போகும் ராசிகள்.!
Astrology: சனி பகவான் வீட்டிற்குள் நுழையும் சுக்கிரன்.! 2026 முதல் கோடிகளில் புரளப்போகும் ராசிகள்.!
Shukra Gochar 2026: வேத ஜோதிடத்தின்படி 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுக்கிர பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெற உள்ளனர்.

சுக்கிர பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். அவர் அன்பு, அழகு, காதல், இன்பம், செல்வம், ஆடம்பரம், கௌரவம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்கி வருகிறார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். 2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் பொழுது அவர் தனுசு ராசியில் இருப்பார். ஜனவரியின் நடுப்பகுதியில் அவர் சனியின் சொந்த ராசியான மகர ராசிக்கு உள்ளது.
மகர ராசிக்குள் நுழையும் சுக்கிரன்
ஜனவரி 13, 2026 அதிகாலை 4:02 மணிக்கு தனுசு ராசியில் இருந்து வெளியேறி, மகர ராசிக்குள் நுழைவார். இவர் இந்த ராசியில் பிப்ரவரி 6-ம் தேதி வரை சஞ்சரிப்பார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளை தரக்கூடும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் மகர ராசி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசியின் பத்தாவது இடமான தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இதன் விளைவாக மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள்.
தொழில் விரிவாக்கம் செய்ய காத்திருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவிற்கு விரிவு செய்வீர்கள். புதிய ஆர்டர்கள் அல்லது திட்டங்கள் கிடைக்கக்கூடும். தொழிலுக்காக கடன் கேட்டு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகள் விலகுவார்கள். இதனால் லாபம் அதிகரிக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்
சுக்கிரனின் இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும். துலாம் ராசியின் லக்னம் மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியான சுக்கிர பகவான் 2026 முதல் நான்காவது வீட்டின் வழியாக பெயர்ச்சி அடைவார்.
இதன் விளைவாக இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பரம், பொன், பொருள், வசதிகளை அனுபவிக்கலாம். வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சி வரக்கூடும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள்.
நீங்கள் செய்த முதலீடுகளில் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்க கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிக அளவு நன்மையைப் பெறுவீர்கள். சுக்கிரன் உங்கள் லக்ன வீட்டில் அமர்வது மிகுந்த நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை அனுபவிப்பீர்கள்.
வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்வீர்கள். சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்படும். தங்கம், வெள்ளி, நிலம், மனை போன்ற திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
புத்தாண்டு முதல் வாழ்க்கை செழிப்பை அடையும். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். வங்கி இருப்பு உயரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

