- Home
- Astrology
- Astrology: பாதையை மாற்றிய ராகு பகவான்.! நவ.23 முதல் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.!
Astrology: பாதையை மாற்றிய ராகு பகவான்.! நவ.23 முதல் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.!
Rahu Shatabhisha Nakshatra Transit 2025: நவம்பர் 23 ஆம் தேதி ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். ராகுவின் இந்த பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகுவின் சதய நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் நவம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:29 மணிக்கு பூராட நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, சதய நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 9 மாதங்களுக்கு அவர் சதய நட்சத்திரத்தில் பயணிக்க இருக்கிறார். ராகுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமை மேம்பட இருக்கிறது. புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நீங்கள் செய்யும் முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டியது அவசியம். மன அழுத்தங்கள் மற்றும் தடைகள் நீங்கும். தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகள் திறக்கப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். குடும்பம் மற்றும் சமூக உறவுகள் வலுவடையும். உங்கள் வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் எழக்கூடும். நீண்ட காலத்திற்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவீர்கள். இந்த நேரமானது கல்வி மற்றும் மன வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் திடீர் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயங்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் திறக்கப்படும். பழைய தகராறுகள் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மன அமைதி கிடைக்கும். முதலீடுகள் மற்றும் புதிய முயற்சிகளில் சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. மன உறுதியை பேணுவதும், ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியம்.
மீனம்
ராகு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரம் தேடிவரும். தனிப்பட்ட வளர்ச்சி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் லாபம் பெறுவதற்கு சாதகமான காலமாகும். எந்த செயலை எடுத்தாலும் பொறுமையை கடைப்பிடிப்பது வெற்றியை உறுதி செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)