- Home
- Astrology
- Astrology: டிசம்பரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சி.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Astrology: டிசம்பரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சி.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Shukra Peyarchi 2025: டிசம்பர் மாதத்தில் சுக்கிர பகவான் நான்கு முறை தனது இயக்கத்தை மாற்ற இருக்கிறார். சுக்கிர பகவானின் இந்த மாற்றமானது ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசம்பரில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் அழகு, செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், வசதி ஆகியவற்றின் காரகராவார். இவர் டிசம்பர் 2025-ல் தனது இயக்கத்தை நான்கு முறை மாற்ற இருக்கிறார். இது 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க உள்ளது.
- டிசம்பர் 9, 2025 சுக்கிர பகவான் அனுஷ நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி கேட்டை நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
- டிசம்பர் 19, 2025 அன்று சுக்கிரன் தெற்கு நோக்கி பயணிப்பார்.
- டிசம்பர் 20, 2025 அன்று விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி தனுசு ராசிக்கு செல்கிறார்.
- டிசம்பர் 30, 2025 சுக்கிரன் மூல நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி பூராடம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
சுக்கிர பகவானின் இந்த நான்கு முக்கிய பெயர்ச்சியால் டிசம்பர் மாதத்தில் 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
டிசம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். அளவில்லாத செல்வம் மற்றும் சொத்துக்கள் சேரும் வாய்ப்புகள் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் கௌரவம் உயரும். நிதி சார்ந்த திட்டங்கள் வெற்றி அடையும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். மன அமைதி கிடைக்கும்.
மிதுனம்
டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அன்பு மற்றும் காதல் அதிகரிக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு முதலீடுகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். இந்த காலகட்டம் ஆரோக்கியம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 2025 மகிழ்ச்சி செழிப்பு மற்றும் அன்பை கொண்டு வரும். குடும்பத்தில் உறவுகள் மேம்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபங்கள் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் நடைபெறும். புதிய யுத்திகளை கையாண்டு லாபத்தைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சுபமாக இருக்கும். துலாம் ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால் இந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். எல்லா வழிகளில் இருந்தும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். வங்கி இருப்பு உயரும். பொருளாதார நிலமை மேம்படும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
மீனம்
சுக்கிரனின் செல்வாக்கு காரணமாக டிசம்பர் மாதம் முழுவதும் மீன ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அனுபவிப்பீர்கள். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன் புதிய வேலையைப் பெறுவீர்கள் முதலீடுகளில் இருந்து லாபம் பெறுவீர்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)