- Home
- Astrology
- இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்.. பணம் கொட்ட போகுது.. கணவருக்கு ஜாக்பாட்!
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்.. பணம் கொட்ட போகுது.. கணவருக்கு ஜாக்பாட்!
இந்த தேதியில் பிறந்த பெண்கள், திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு உறவையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று எண் ஜோதிடம் சொல்கிறது.

வலிமைமிக்க பெண்கள்
பிறந்த வீடு மட்டுமின்றி புகுந்த வீட்டையும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் வலிமை படைத்தவள் பெண். சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள், தங்களுக்கு மட்டுமல்ல, தங்களை மணக்கும் கணவனுக்கும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள் என்கிறது எண் கணித ஜோதிடம். எந்த தேதிகளில் பிறந்த பெண்கள்? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சொல்கிறேன்.
1ம் தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்
அதாவது 1ம் தேதி பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறுகிறது எண் ஜோதிடம். பிறந்த எண் 1 கொண்ட பெண்கள், தங்கள் கணவன்மார்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள். திருமணத்திற்குப் பிறகு, கணவரின் வாழ்க்கையையே மாற்றும் சக்தி இவர்களுக்கு உண்டு. எண் கணிதப்படி, எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும்.
தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு
இந்த எண்ணின் அதிபதி சூரியன். சூரியனின் ஆதிக்கத்தால், இந்த பெண்கள் பிறப்பிலிருந்தே தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த எண் 1 கொண்ட பெண்கள் வசீகரமான ஆளுமை கொண்டவர்கள். கூட்டத்திலும் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடிப்பார்கள். இவர்கள் எங்கு சென்றாலும், மக்கள் இவர்களின் ரசிகர்களாகி விடுவார்கள். தன்னம்பிக்கை நிறைந்த இவர்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியை அடைகிறார்கள்.
புகுந்த வீட்டிலும் மரியாதை
பிறந்த எண் 1 கொண்ட பெண்கள், திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு உறவையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்ல, புகுந்த வீட்டிலும் இவர்களுக்கு அதிக அன்பும் மரியாதையும் கிடைக்கும். இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அன்பு, செல்வம், புகழ் என எல்லாமே இவர்களுக்கு கிடைக்கும் என்கிறது எண் ஜோதிடம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எண் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

