- Home
- Astrology
- சூரிய கிரகணம் 2026: சதுர்கிரகி யோகத்தால் இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது! ஜாக்பாட்!
சூரிய கிரகணம் 2026: சதுர்கிரகி யோகத்தால் இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது! ஜாக்பாட்!
Solar Eclipse 2026: ஆகஸ்ட் 12 ஆடி அமாவாசையன்று கடகத்தில் நிகழும் சூரிய கிரகணத்தால் 'சதுர்கிரகி யோகம்' உருவாகிறது. இதனால் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன? எனப்து குறித்து பார்ப்போம்.

சூரிய கிரகணம் 2026
வானியல் ரீதியாகவும், ஜோதிடக் கணக்கீடுகளின்படியும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் 2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை நாளில் நிகழவுள்ளது. சந்திரன், சூரியனை முழுமையாக மறைக்கும் இந்த முழு சூரிய கிரகணம், கடக ராசியில் சம்பவிக்கிறது.
சிறப்பு அம்சமாக, இந்த நாளில் கடக ராசியில் சூரியன், சந்திரன், புதன் மற்றும் குரு ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒன்றாகச் சேர்வதால் 'சதுர்கிரகி யோகம்' எனும் சக்திவாய்ந்த கிரக சேர்க்கை உருவாகிறது. இந்தக் கிரகணம் இந்தியாவில் காட்சி தராவிட்டாலும், இதன் ஆற்றல் மற்றும் ஜோதிடத் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக, இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் பெரும் யோகத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் பெறவுள்ளனர். அவர்கள் யார் என்று விரிவாகப் பார்ப்போம்.
இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் அரிதான 2 புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணமழை.. தொட்டதெல்லாம் வெற்றி!
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த சூரிய கிரகணமும் கிரகச் சேர்க்கையும் பல கதவுகளைத் திறந்து விடப்போகிறது. புதிய வருமான வழிகள் உருவாகி, பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த வீடு தொடர்பான சிக்கல்கள் சுமுகமாக முடியும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடிவரும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணியிடத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சதுர்கிரகி யோகம் மிகச் சிறந்த பலன்களையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வாய்ப்புகளையும் தரும். புதிய வாகனம் அல்லது அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் கை கூடிவரும். உங்கள் மீது பிறர் வைத்திருந்த தவறான கருத்துக்கள் மறைந்து, உங்களுக்கான மரியாதையும் மதிப்பும் கூடும்.
வேலை தேடுபவர்களுக்குச் நல்ல நிறுவனத்தில் பணி அமையும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரமும் சாதனைகளுக்கான பாராட்டும் கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
கிரகணம் மற்றும் சதுர்கிரகி யோகம் உங்கள் சொந்த ராசியிலேயே நிகழ்வதால், இது உங்களுக்கு மிகப்பெரிய நேர்மறை மாற்றங்களையும், திருப்புமுனையையும் தரும் காலக்கட்டமாக அமையும். குரு, புதன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசியில் நடப்பதால், உங்கள் ஆளுமை, சிந்திக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் பல மடங்காக அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல்நலக் குறைபாடுகள் சீராகும். கணவன்-மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் தடைகளின்றி கைகூடும்.
கும்பம்
இயற்கையிலேயே நிதி மேலாண்மையில் வல்லவர்களான கும்ப ராசியினருக்கு இந்த காலக்கட்டம் மேலும் வளமான சூழலை உருவாக்கும். பணத்தைப் பெருக்குவதற்கான புதிய தொழில் முயற்சிகளும், முதலீட்டு வாய்ப்புகளும் லாபகரமாக அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும், எதிர்பார்க்கும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு விருப்பமான பரிசுகளை வழங்கி மகிழ்விக்கும் வாய்ப்பு அமையும்.

