MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Garuda Purana: மனிதன் இறந்த பின் முதல் 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? எமலோக பயணம் முதல் அந்த 13 நாட்கள்! கருட புராண உண்மை!

Garuda Purana: மனிதன் இறந்த பின் முதல் 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? எமலோக பயணம் முதல் அந்த 13 நாட்கள்! கருட புராண உண்மை!

Soul: கருட புராணத்தின்படி, இறந்த ஒருவரின் ஆன்மா உடனடியாக இவ்வுலகை விட்டுச் செல்வதில்லை. முதல் 13 நாட்களுக்கு அது தனது வீட்டைச் சுற்றியே இருக்கும் தனது இறுதிப் பயணத்தை எமலோகம் நோக்கித் தொடங்குகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 05 2026, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கருட புராணம்
Image Credit : Asianet News

கருட புராணம்

உலகில் பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருக்கும். மரணத்திற்குப் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனுடன் சார்ந்தது. இந்நிலையில் மனிதனின் பிறப்பு, இறப்பு மற்றும் மரணத்திற்குப் பிந்தைய ஆன்மாவின் பயணம் குறித்து இந்து மதத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றான கருட புராணம் மிக விரிவாக விளக்குகிறது. ஒருவர் மரணித்த பிறகு, அவரது ஆன்மா உடனடியாக இந்த உலகை விட்டுச் செல்வதில்லை, அது எத்தனை நாட்கள் தனது வீட்டைச் சுற்றி இருக்கும் என்பது குறித்தும் கருட புராணம் கூறும் ரகசியங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல் 24 மணி நேரம் எமலோகத்திற்கு முதல் பயணம்
Image Credit : Asianet News

முதல் 24 மணி நேரம் எமலோகத்திற்கு முதல் பயணம்

ஒருவர் இறந்ததுமே எம தூதர்கள் அவரது ஆன்மாவை எமலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே அந்த ஆன்மா செய்த பாவ, புண்ணிய கணக்குகளை சித்திரகுப்தன் சரிபார்ப்பார். இந்த செயல்முறைகள் அனைத்தும் மரணம் நிகழ்ந்த முதல் 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும். கணக்குகளை பார்த்த பிறகு எம தூதர்கள் அந்த ஆன்மாவை மீண்டும் அவரது சொந்த வீட்டிற்கே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.

1 முதல் 10 நாட்கள்

வீட்டிற்குத் திரும்பும் ஆன்மாவிற்கு மிகச்சிறிய அளவிலான உடலே இருக்கும். அந்த ஆன்மா தான் வாழ்ந்த வீட்டைச் சுற்றியும், உடல் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலும் உலவி வரும். இந்த 10 நாட்களில் குடும்பத்தினர் செய்யும் பிண்ட தானம் மற்றும் ஈமச்சடங்குகளே அந்த ஆன்மாவிற்கு உணவாகவும், அடுத்த கட்ட பயணத்திற்கான ஆற்றலாகவும் மாறுகின்றன.

Astrology: நிதி நெருக்கடியை போக்க 4 சக்திவாய்ந்த ரத்தினக் கற்கள்.! இனி உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

Related Articles

Related image1
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Related image2
Daily Horoscope: இன்று உங்களுக்கு பண மழையா? அல்லது கடன் தொல்லையா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
34
வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்
Image Credit : Asianet News

வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்

11 மற்றும் 12-ம் நாட்களில் செய்யப்படும் சிறப்பு சடங்குகள்

இந்த நாட்களில் செய்யப்படும் சிறப்புச் சடங்குகள், தான தர்மங்கள் மூலம் ஆன்மா தனது பசியை ஆற்றிக் கொள்கிறது. குடும்பத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் மாலையில் ஏற்றப்படும் தீபத்தின் வெளிச்சம், ஆன்மா தனது பூலோகப் பற்றுக்களைத் துறந்து எமலோகப் பயணத்திற்குத் தயாராக வழிவகுக்கும்.

13-ஆம் நாளில் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்

கருட புராணத்தின்படி, மரணத்திற்குப் பிறகு 13-வது நாளில் தான் ஆன்மா தனது வீட்டை விட்டும், இந்த பூலோகத்தை விட்டும் நிரந்தரமாக வெளியேறுகிறது. 13-ம் நாள் சடங்குகள் முடிந்த பிறகு, எம தூதர்கள் ஆன்மாவை எமலோகத்தை நோக்கி அழைத்துச் செல்வார்கள். இந்த இறுதிப் பயணம் ஆன்மாவின் கர்மாக்களைப் பொறுத்து 47 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.

44
இறந்தவரை அழைக்க வேண்டாம்
Image Credit : Asianet News

இறந்தவரை அழைக்க வேண்டாம்

இந்த 13 நாட்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை

ஆன்மா 13 நாட்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதால்தான், அந்த நாட்கள் வரை தீட்டு காக்கப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டில் 13 நாட்களும் தூய்மையாக இருக்க வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து குளிக்க வேண்டும். இரவில் அளவுக்கு அதிகமாக அழுவதைத் தவிர்க்க வேண்டும்.

இறந்தவரை அழைக்க வேண்டாம்

இறந்தவரின் பெயரைச் சொல்லி மீண்டும் மீண்டும் கதறி அழைப்பதைக் தவிர்க்க வேண்டும். அப்படி அழைப்பது அந்த ஆன்மாவிற்குப் போய்ச் சேர வேண்டிய பாதையில் பெரும் துன்பத்தையும், மனக் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?
Recommended image2
Daily Horoscope: இன்று உங்களுக்கு பண மழையா? அல்லது கடன் தொல்லையா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Recommended image3
குரு அஸ்தமனம்: 30 நாளில் கோடீஸ்வரர் ஆகும் 4 ராசிகள்! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் காலம் ஆரம்பம்?
Related Stories
Recommended image1
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image2
Daily Horoscope: இன்று உங்களுக்கு பண மழையா? அல்லது கடன் தொல்லையா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved