MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: நிதி நெருக்கடியை போக்க 4 சக்திவாய்ந்த ரத்தினக் கற்கள்.! இனி உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

Astrology: நிதி நெருக்கடியை போக்க 4 சக்திவாய்ந்த ரத்தினக் கற்கள்.! இனி உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

Gemstones: ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் ஆற்றலை நம் வாழ்விற்குச் சாதகமாக்க பல்வேறு ரத்தினங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண மனிதர்கள்கூட இவற்றை அணிந்தால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்று நம்பப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 04 2026, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
4 சக்திவாய்ந்த ரத்தினங்கள்
Image Credit : Asianet News

4 சக்திவாய்ந்த ரத்தினங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் ஆற்றலை நம் வாழ்விற்குச் சாதகமாக்க பல்வேறு ரத்தினங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் சில ரத்தினங்கள், பணத்தையும் செல்வ வளத்தையும் காந்தம் போல் தன்பால் ஈர்க்கும் அசாத்திய சக்தி கொண்டவை என்பதால், அவற்றை 'மணி மேக்னட்' என்றே அழைக்கிறார்கள். நிதி நெருக்கடியைப் போக்கி, பண வரவை அதிகரிக்கும் அத்தகைய 4 சக்திவாய்ந்த ரத்தினங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மரகதம் (Emerald)
Image Credit : Getty

மரகதம் (Emerald)

புத்தி காரகனான புதன் பகவானுக்குரிய ரத்தினம் மரகதப் பச்சை ஆகும். புத்தி கூர்மை, வியாபார தந்திரம் மற்றும் கனிவான பேச்சுத் திறனுக்கு இந்த கல் வழிவகுக்கும். மரகதம் அணிவதால் சரியான நேரத்தில் மிகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும். மார்க்கெட்டிங், வங்கித் துறை, எழுத்து மற்றும் வணிகத் துறையில் இருப்பவர்களுக்குப் பலமடங்கு லாபம் பெருகும்.

Related Articles

Related image1
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Related image2
Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
35
மாணிக்கம் (Ruby)
Image Credit : Getty

மாணிக்கம் (Ruby)

நவகிரகங்களின் அரசனான சூரிய பகவானின் ஆற்றல் கொண்டது மாணிக்கம். ஜோதிடத்தின்படி, இந்த கல் தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்பையும் அதிகரிக்கிறது. இதன் மூலம், மக்கள் பணம் தொடர்பான நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த ரத்தினம் ஒருவருக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறனை அளித்து, அவரை நிதி வெற்றிக்கு அழைத்துச் செல்லும். எனவே, இது மறைமுகமாக செல்வம் மற்றும் மதிப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

45
புஷ்பராகம் (Yellow Sapphire)
Image Credit : Getty

புஷ்பராகம் (Yellow Sapphire)

மங்கள காரகனான வியாழன் (குரு) பகவானின் ரத்தினம் புஷ்பராகம் ஆகும். ஜோதிட விதிகளின்படி, இந்த கல் ஒருவருக்கு அளப்பரிய நிதி வளர்ச்சி, ஞானம் மற்றும் பெரும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது. ஜாதகத்திற்கு ஏற்ப இதனை அணிவதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்.

55
சிட்ரின் (Citrin)
Image Credit : Getty

சிட்ரின் (Citrin)

ஃபெங் சுய் மற்றும் கிரிஸ்டல் ஹீலிங் (Crystal Healing) முறைகளில், பணத்தை ஈர்க்கும் மிகச் சக்திவாய்ந்த கல்லாக இந்த 'சிட்ரின்' கருதப்படுகிறது. இதனாலேயே இதற்கு 'மணி ஸ்டோன்' அல்லது 'வியாபாரிகளின் கல்' என்ற பெயர்களும் உண்டு. தடையற்ற பண வரவிற்கும், நேர்மறை ஆற்றலுக்கும் இது பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகவே, பல தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் இந்த கல்லைத் தங்கள் அலுவலகம், கேஷ் கவுன்ட்டர் அல்லது பணப்பெட்டியில் வைத்திருக்கிறார்கள்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer)
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவலை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஊடகமாக மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம். பயனர்கள் இந்தத் தகவல்களை வெறும் குறிப்புகளாக மட்டுமே கருத வேண்டும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
பணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Tamil Astrology: சுக்கிரன் மீது விழுந்த கேதுவின் தீய பார்வை.! அடுத்த ஒரு மாதம் 4 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.!
Recommended image3
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Related Stories
Recommended image1
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image2
Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved