- Home
- Astrology
- Nov 07 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! எச்சரிக்கையா இருங்க.!
Nov 07 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! எச்சரிக்கையா இருங்க.!
Today Rasi Palan : நவம்பர் 07, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 07, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் அவசரமான செயல்கள் பேச்சுக்கள் அல்லது முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டுக்கும் இடையே சமநிலையை பேண வேண்டும். சில நேரங்களில் தன்னம்பிக்கை குறையலாம். எனவே எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த பலன்கள் அல்லது பணிகள் குறித்த நேரத்தில் நிறைவடையாமல் தாமதமாகலாம்.
நிதி நிலைமை:
இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நிதி ஆதாரங்கள் திறக்கப்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்க்கவும். இருக்கும் நிதி ஆதாரங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள். வரவு செலவு திட்டங்களை மறுபரிசீலனை செய்வது அல்லது நிலவையில் இருக்கும் கடன்களை அடைக்க முயற்சிப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
உறவுகளில் அமைதியும், பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும். காதல் துணையிடம் உண்மையாக இருங்கள். ரகசியமாக எதையும் மறைப்பதை தவிர்க்கவும். வெளிப்படத் தன்மை அவசியம். உங்கள் அணுகுமுறை குடும்பத்தினரை ஈர்க்கும். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
பரிகாரங்கள்:
இது நிதி நிலைமை மேம்படுவதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள். துர்க்கை அம்மன் வழிபாடு வெற்றியைத் தரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது இந்த நாளுக்கான சிறந்த பரிகாரமாகும். உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.