- Home
- Astrology
- Astrology: துலாம் ராசியில் இணையும் இரு சுப கிரகங்கள்.! நவ.23-க்கு பிறகு 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Astrology: துலாம் ராசியில் இணையும் இரு சுப கிரகங்கள்.! நவ.23-க்கு பிறகு 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Shukra Budh Yuti 2025: நவம்பர் 2025 இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்களான சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் துலாம் ராசியில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசியில் இணையும் புதன் சுக்கிரன்
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் சுப கிரகங்களாக அறியப்படுகின்றனர். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், அழகு, அறிவு, வசதிகள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும், புதன் பகவான் வணிகம், பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கிரகமாகவும் விளங்குகிறார். நவம்பர் 2 அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் சஞ்சரித்து நவம்பர் 26 வரை அங்கேயே இருக்கிறார்.
இந்த நிலையில் நவம்பர் 23 அன்று மாலை 7:58 மணிக்கு புதன் துலாம் ராசிக்குள் நுழைந்து டிசம்பர் 6 வரை சஞ்சரிக்க இருக்கிறார். நவம்பர் 23, 2025 அன்று சுக்கிரன் துலாம் ராசியில் புதனை சந்திக்க இருக்கிறார். ஜோதிடத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பாக கருதப்படுகிறது. இந்த இணைப்பால் அதிக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
துலாம்
- இந்த சேர்க்கை துலாம் ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் 23 தொடங்கி அடுத்த சில தினங்களுக்கு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
- தனிப்பட்ட ஆளுமை, தன்னம்பிக்கை ஆகியவை உச்சத்தை அடையும். உங்கள் பேச்சாற்றல் இனிமையாகவும், கவர்ச்சியாகவும் மாறும். இதனால் நீங்கள் விரும்பியதை சாதிப்பீர்கள்.
- திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
- தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உருவாகும். கலை, வடிவமைப்பு, எழுத்து போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான படைப்பாற்றல் வெளிப்படும்.
கன்னி
- சுக்கரன் புதன் சேர்க்கை கன்னி ராசியின் 12 ஆம் வீட்டில் நடைபெறும். கன்னி ராசி புதன் ஆட்சி செய்யும் ராசியாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அனுபவிப்பீர்கள்.
- பணவரவு அல்லது பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதன் பகவான் உங்களுக்கு எழுத்து மற்றும் பேச்சுத் திறனை வழங்குவார். இதன் காரணமாக நீங்கள் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.
- வேலை இடத்திலும் சரி, குடும்பத்திலும் சரி இருந்த மன அழுத்தங்கள் நீங்கி அமைதி நிலவும். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உருவாகலாம்.
மகரம்
- மகர ராசிக்கு இந்த சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நடைபெற இருக்கிறது. ஒன்பதாம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் மேம்படும்.
- தடைகள் நீங்கி காரியங்கள் கைகூடும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உங்கள் குருமார்கள் அல்லது வழிகாட்டுதலால் நன்மை உண்டாகும். உயர்கல்வி பயில விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட பயணங்களால் லாபம் ஏற்படும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
- குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் நல்ல இடத்தில் பணி மாறுதல் கிடைக்கும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை ஏழாம் வீட்டில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தொழில் கூட்டாண்மை மற்றும் வியாபார உறவுகளில் அதிகபட்ச நன்மை கிடைக்கும்.
- புதிய கூட்டாளிகள் மூலம் லாபம் உயரலாம். துணையுடன் இணக்கமான உறவு, பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள்.
- சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)