- Home
- Astrology
- Astrology: கேதுவின் நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! டிசம்பர் முதல் வெற்றிகளை குவிக்கபோகும் 3 ராசிகள்.!
Astrology: கேதுவின் நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! டிசம்பர் முதல் வெற்றிகளை குவிக்கபோகும் 3 ராசிகள்.!
Mars Transit in Moola Nakshatra in 2025: டிசம்பர் 7, 2025 செவ்வாய் பகவான் கேது பகவானின் சொந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூல நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய்
வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் ஆற்றல், தைரியம், வீரம், சகோதரர்கள், நிலம், சொத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தற்போது தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் இருந்து வரும் அவர் தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். குறிப்பாக கேதுவின் சொந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்திற்கு இரவு 8:27 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த பெயர்ச்சி ஏன் முக்கியமானது?
மூல நட்சத்திரம் என்பது கேது பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வரும் நட்சத்திரமாகும். இது தீவிரமான தேடல், ஆழமான மாற்றம், கடந்த கால கர்மாவிலிருந்து விடுபடுதல் மற்றும் புதிய சிந்தனைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை குறிக்கிறது. தனுசு ராசியின் முதல் நட்சத்திரமாகவும் மூல நட்சத்திரம் விளங்கி வருகிறது. தனுசு ராசி என்பது குருவின் ஆதிக்கம் கொண்ட ராசியாகும். இது ஞானம், தத்துவம், உயர்கல்வி ஆகியவற்றை குறிக்கிறது. செவ்வாய் பகவானின் இந்த மூல நட்சத்திர பெயர்ச்சியானது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேஷம்
- செவ்வாய் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், குறிப்பிட ராசிகள் இதனால் அதிக நன்மைகளை பெற உள்ளனர்.
- குறிப்பாக மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் பல வழிகளில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
- வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
- உயர்கல்வி அல்லது நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உடல் நலம் மேம்படும். உறவுகளில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
- செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் கிரகமாக இருக்கிறார். இந்த பெயர்ச்சி சிம்ம ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நடைபெற இருப்பதால், இது பல வழிகளில் நன்மையைக் கொடுக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள், வரன்கள் தேடி வரும். குழந்தை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- புதிய திட்டங்களை தொடங்குவதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு சாதகமான நேரம் நெருங்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.
- படைப்பாற்றல் துறையில் இருப்பவர்களுக்கு புகழும், உயர்வும் கிடைக்கும்.
தனுசு
- செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே பெயர்ச்சியாவதன் காரணமாக இந்த பலன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தனுசு ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அதிக ஆற்றல் மற்றும் தைரியம் உண்டாகும்.
- செவ்வாய் பகவான் உங்களுக்கு வீரத்தையும், துணிச்சலையும் வழங்குவார். இதனால் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- தாமதமான வேலைகள் வேகமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபமும், முன்னேற்றமும் காணப்படும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)