MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பணமழை.! வாழ்வில் புதிய உச்சம் பெறுவீர்கள்.!

தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பணமழை.! வாழ்வில் புதிய உச்சம் பெறுவீர்கள்.!

Tamil Puthandu Palangal 2026 : தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிர பகவனால் சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 10 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Puthandu Palangal 2026
Image Credit : Asianet News

Tamil Puthandu Palangal 2026

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அசுரர்களின் குருவான இவர் அழகு, அன்பு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரு ராசிகளையும் ஆட்சி செய்து வருகிறார். தற்போது அவர் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று அவர் வருண பகவானுடன் இணைந்து அர்த்த கேந்திர ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

25
அர்த்த கேந்திர யோகம்
Image Credit : Asianet News

அர்த்த கேந்திர யோகம்

சுக்கிர பகவான் மேஷ ராசியிலும், வருண பகவான் மீன ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டான பாரபவ வருடம் பிறக்க இருக்கிறது. அந்த சுப தினத்தில் சுக்கிரன் மற்றும் வருணன் ஆகிய இருவருக்கும் இடையே 45 டிகிரி கோணம் ஏற்பட்டு அடுத்த கேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related image2
சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
35
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

சுக்கிரன் மற்றும் வருணன் இருவரும் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை கொண்டு வர உள்ளது. இந்த யோகத்தின் பலன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சுக்கிர பகவானின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த தகராறுகள் முடிவுக்கு வரும்.

45
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் அர்த்தம் கேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செலவுகள் குறையும். லாபம் தரும் பயணங்கள் செல்ல நேரிடலாம். இந்த பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் உருவாகும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் குறையும். முக்கியமாக சுக்கிரனின் அருளால் பண பிரச்சினைகள் தீரும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் கவனமாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

55
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் மற்றும் வருணன் மூலம் உருவாகும் அத்த கேந்திர யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழிலில் மகத்தான வெற்றி பெறுவீர்கள். மனைவி, மாமனார் அல்லது மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை சிறப்பாக மாறும். கைக்கு வராமல் சிக்கி இருந்த பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: மாறும் கிரகங்கள்.!தமிழ் புத்தாண்டு முதல் 6 நட்சத்திரங்கள் காட்டில் பணமழை! பரிகாரம் செய்தால் பலன் இரட்டிப்பு!
Recommended image2
மேஷம் முதல் மீனம் வரை: ஏப்ரல் 10 அன்று உருவாகும் 4 சுப யோகங்கள்.! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! பணவரவு யாருக்கு?
Recommended image3
வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு இதுதான் காரணமா? பிறந்த தேதி சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்!
Related Stories
Recommended image1
சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved