MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Guru Peyarchi 2026 in Punarpoosam Nakshatra : குரு பகவான் இன்னும் சில தினங்களில் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 09 2026, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Guru Peyarchi in Punarpoosa Natchathiram Rasi Palangal
Image Credit : Asianet News

Guru Peyarchi in Punarpoosa Natchathiram Rasi Palangal

ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இவர் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிக்கடி மாற்றுகிறார். அந்த வகையில் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு அவர் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரம் குரு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். எனவே இந்த காலகட்டத்தில் அவர் தனது முழு பலன்களை முழுமையாக வெளிப்படுத்துவார். இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலித்தாலும், நான்கு ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

25
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

குரு பகவானின் நட்சத்திர மாற்றமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். கடந்த காலத்தில் சந்தித்து வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு பகவான் நிலையில் ஏற்படும் மாற்றம் புதிய சொத்துக்கள், புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு, நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நிதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த சில மாதங்கள் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.

Related Articles

Related image1
30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Related image2
அட்சய திருதியையில் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! 5 ராசிகளுக்கு பணம், நகை குவியப்போகுது.!
35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி உங்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும். புதிய வழிகள் திறக்கும். தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகம் எடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழில் புதிய உச்சத்தை அடையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு வழக்குகள் சாதகமாக வரும். எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பம், வாழ்க்கை, வேலை, ஆரோக்கியம் என அனைத்தும் சாதகமாக மாறும்.

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

குரு பகவானின் இந்த மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரத் துவங்கும். கிடப்பில் இருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் பொருத்தமான துணையை கண்டறிவீர்கள். கடந்த கால முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மீள முடியாமல் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் காலம் நெருங்கியுள்ளது. உங்களது உழைப்பால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

55
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசியின் அதிபதியான குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது, தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது. சொத்து பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் என அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் பெரிய உடல்நல பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். புதிய ஆற்றல் பிறக்கும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் துணை நிற்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மேஷம் முதல் மீனம் வரை: ஏப்ரல் 9-ல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.! பணவரவு யாருக்கு? துல்லியமான பலன்கள் இதோ.!
Recommended image2
அட்சய திருதியை நாளில் உருவாகும் பல சுப யோகங்கள்.! இந்த 4 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம்.! ஒரே இரவில் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Related Stories
Recommended image1
30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Recommended image2
அட்சய திருதியையில் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! 5 ராசிகளுக்கு பணம், நகை குவியப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved