- Home
- Astrology
- Astrology: சூரிய பகவானுடன் கை கோர்த்த புதன் பகவான்.! அரிய நிகழ்வால் அதிர்ஷ்டத்தைக் குவிக்கப் போகும் ராசிகள்
Astrology: சூரிய பகவானுடன் கை கோர்த்த புதன் பகவான்.! அரிய நிகழ்வால் அதிர்ஷ்டத்தைக் குவிக்கப் போகும் ராசிகள்
Budhaditya RajaYoga: சூரிய பகவான் கன்னி ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், அவர் புதனுடன் இணைந்து புதாத்திய ராஜயோகத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

சூரியன்-புதன் இணைவு
வேத ஜோதிடத்தின்படி இரண்டு கிரகங்கள் ஒன்றாக இணையும் பொழுது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன். சுப யோகங்கள் உருவாகும் பொழுது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் இடையே சேர்க்கை நடைபெற உள்ளது. புதன் பகவான் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சூரிய பகவானும் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கும் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் ஏற்பட உள்ளது. ஜோதிட கணக்கீடுகளின் படி இந்த இணைவு உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் உருவாகும். இதன் காரணமாக பண வரவு அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. லாபகரமான முதலீடுகளில் நிலையான அதிகரிப்பு ஏற்படும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் மரியாதை மற்றும் லாபத்தை பெறுவீர்கள். இந்த ராஜயோகமானது உங்கள் ஆளுமையிலும் மாற்றத்தை கொண்டு வரும். சுயமாக தொழில் செய்து வருபவர்கள், வியாபாரம் செய்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
விருச்சிகம்
சூரியன் மற்றும் புதன் இணைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த மங்களகரமான யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட அலையை கொண்டு வரும். இதனால் லாபமும், வருமானமும் அதிகரிக்கும். வருமானத்தில் குறிப்பிட தகுந்த அளவுக்கு அதிகரிப்பு ஏற்படும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளை பெறுவீர்கள். பழைய கடன்கள் அனைத்தும் தீரும் நிதி நிலைமையை சீராக்குவதற்கான பல கதவுகள் திறக்கப்படும்.
தனுசு
சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்யராஜ யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த சேர்கையானது தனுசு ராசியின் தொழில் மற்றும் வணிகத்தின் வீட்டில் உருவாகும். இதன் விளைவாக வேலையில் நீங்கள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அனுபவிப்பீர்கள். வரும் நாட்களில் வேலை இடத்தில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிறிதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். அதே சமயம் குறிப்பிடத்தகுந்த நிதி ஆதாயங்களையும் அனுபவிப்பீர்கள். நிதி நிலைமை மேம்படுவதால் நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.