- Home
- Astrology
- Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி-புதனின் அரிய சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.!
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி-புதனின் அரிய சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.!
பிரதியுதி திருஷ்டி : செப்டம்பர் 17 ஆம் தேதி புதனும், சனியும் 180 டிகிரியில் அமைந்திருப்பார்கள். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பிரதியுதி திருஷ்டி 2025
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து பிற கிரகங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 17 அன்று இரவு 11:15 மணிக்கு புதன் மற்றும் சனி இருவரும் 180 டிகிரியில் சந்திப்பார்கள். இதன் காரணமாக ஒரு எதிர் இணைப்பு உருவாகும். இந்த சூழலில் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வணிகம் முன்னேற்றத்தை அடையும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
சனி மற்றும் புதன் சேர்க்கை மீன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். நீங்கள் எதிர்பாராத திடீர் பண லாபங்களைப் பெறலாம். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். உங்கள் தொழிலில் இருந்து வந்த நிதி இழப்புகள் சரி செய்யப்பட்டு லாபம் பன்மடங்காக பெருகும். திருமண வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு முடிவிலும் உங்கள் துணைவரின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்திலிருந்து வேலைப்பளு நீங்கி மன அமைதி உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் சேர்க்கை நன்மைகளைத் தரும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை ஈட்டுவீர்கள். சிறு காரியங்கள் கூட உங்களுக்கு வெற்றியைத் தரும். நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதில்லை. தொழிலதிபர்கள் அனைத்து வகையிலும் லாபம் ஈட்டுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் திருப்திகரமான சூழல் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்கு இந்த இணைப்பு பல வழிகளில் சாதகமான சூழலை கொண்டு வரும். உங்கள் வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குழுவை தாங்கும் பொறுப்பு வழங்கப்படலாம். பணி ரீதியாக நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டு. வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். அதிக பண வரவால் நீங்கள் புது வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உண்டு. பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவதன் மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)