- Home
- Astrology
- Astrology: 50 ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்.! இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்!
Astrology: 50 ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் இணையும் 3 கிரகங்கள்.! இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்!
Trigrahi Yoga : ஜோதிட சாஸ்திரங்களின்படி 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்ம ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக உருவாகும் திரிகிரக யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

திரிகிரக யோகம் 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்குகின்றன. இந்த நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் மூன்று கிரகங்கள் சந்திக்க இருக்கின்றன.
சிம்ம ராசியில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரிய பகவானும், நிழல் கிரகமான கேதுவும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். சுக்கிரன் கேது சூரியனின் சேர்க்கையால் சிம்ம ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெற உள்ளனர் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
திரிகிரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் பல நன்மைகளை அடையலாம். ஏனெனில் சூரியன், சுக்கிரன் கேதுவின் சேர்க்கை உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டில் உருவாகப் போகிறது. எனவே இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். முன்பை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த வேலையை எடுத்தாலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் பேச்சு மற்றும் தொடர்பு திறன் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் ஈர்ப்பு இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த சுமை குறைவதால் மன அமைதி கிடைக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீர் லாபங்கள் கிடைப்பதால் நல்ல முதலீடுகளில் சேமிப்பை தொடங்குவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த யோகம் உங்கள் ராசியில் இருந்து தொழில் மற்றும் வணிக இடத்தில் உருவாகப் போகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திட்டங்கள் பாராட்டப்படும். ஒரு குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவார்கள். வணிகம் மற்றும் தொழில் செய்து வருபவர்கள் இந்த காலக்கட்டத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள், அரசு டெண்டர்கள், வணிக விரிவாக்கம் ஆகியவை செய்யும் வாய்ப்பும் உண்டு்.
கடகம்
திரிகிரக யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்க இருக்கிறது. உங்களின் செல்வ வீட்டில் இந்த யோகம் உருவாவதால் பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சில் ஈர்ப்புத் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக பல முதலீடுகளை எளிதாக ஈர்ப்பீர்கள். வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் திறக்கப்படலாம். உங்கள் சிந்தனை, படைப்பாற்றல், முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறும். நீங்கள் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு சிறு குழப்பங்கள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக சுப செய்திகள் வந்து சேரலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.