- Home
- Astrology
- Astrology: குரு-புதன் நடத்தும் அற்புதம்.! அடுத்த சில நாட்களில் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாறப்போகுது.!
Astrology: குரு-புதன் நடத்தும் அற்புதம்.! அடுத்த சில நாட்களில் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாறப்போகுது.!
Dashank Yoga : வேத ஜோதிடத்தின் படி குருவும், புதனும் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசியில் குரு பகவான்
வேத ஜோதிடத்தில் படி குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். தேவர்களின் அதிபதியான இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு வரை பயணிப்பார். அவரின் பெயர்ச்சியானது அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. வியாழன் ரிஷப ராசியை விட்டு வெளியேறிய மிதுன ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார். மிதுன ராசிக்கு வந்தவுடன் அவர் ஆக்ரோஷமான வேகத்தில், பல மடங்கு வேகத்துடன் நகர்ந்து வருகிறார். இத்தகைய சூழலில் அவர் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார்.
குரு-புதன் உருவாக்கும் தசாங்க யோகம்
வானத்தில் 27 விண்மீன்களும், 12 ராசிகளும் ஒரு அதிர்ஷ்ட சக்கரத்தை உருவாக்குகின்றன. இது 360° ஆகும். அதில் பத்தில் ஒரு பங்கு 36° ஆகும். எனவே 36 டிகிரியில் இரண்டு கிரகங்கள் சந்திப்பது சிறப்பு வாய்ந்த யோகத்தை உருவாக்குகிறது. ஜோதிட சாஸ்திரங்களின்படி செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு 8:53 மணிக்கு குருவும், புதனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரியில் சந்திக்கின்றனர். கிரகங்களின் இளவரசனான புதன் தற்போது கன்னி ராசியில் அமர்ந்துள்ளார். இவர் குருவுடன் 36° டிகிரி இடைவெளியில் அமர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்குகிறார். இந்த தசாங்க யோகத்தால் பலன் தரும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
குரு மற்றும் புதனின் இணைவால் உருவாகும் தசாங்க யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்க உள்ளது. புதன் ஐந்தாவது வீட்டிலும், குரு இரண்டாவது வீட்டிலும் சஞ்சரிப்பதால் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைவதால் வருமானத்தில் குறிப்பிடத்தகுந்த அதிகரிப்பு ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்களும், வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒப்பந்தம் முடிவடையும். புதிய முதலீடுகள் மூலம் லாபத்தை பெறுவீர்கள். எதிர்காலத்திற்கான வலுவான நிதி அடித்தளம் உருவாகும்.
சிம்மம்
தசாங்க யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க இருக்கிறது நீங்கள் முன்னேறி செல்வதற்கும் உங்கள் இலக்குகளை அடைப்பதற்கும் இது முக்கியமான காலமாகும் தொழில்துறையில் பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள் வணிகத்தில் நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம் புதிய உத்திகளை கையாண்டு நிதி நிலைமையை பெருக்குவீர்கள் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும் சிறிய அளவில் தொழில் செய்து மறுப்பவர்கள் வணிகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வீர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் திடீர் பணவரவால் சேமிப்பை தொடங்குவீர்கள் குடும்ப உறவுகள், ஆரோக்கியம் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தும் மேம்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகும் தசாங்க யோகம் பல வழிகளில் நன்மைகளைத் தரும். இந்த யோகத்தின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறையும். வேலைப்பளு குறைந்து மன நிம்மதி கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் வெற்றிகரமாக தொழிலை தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.