- Home
- Astrology
- Astrology: இன்று நடக்கும் சூரிய பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு சூரிய பகவான் அள்ளி அள்ளி கொடுக்கப் போகிறார்.!
Astrology: இன்று நடக்கும் சூரிய பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு சூரிய பகவான் அள்ளி அள்ளி கொடுக்கப் போகிறார்.!
Sun transit 2025 : சூரிய பகவான் இன்று (செப்டம்பர் 17) சிம்ம ராசியிலிருந்து வெளியேறி கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தின் படி ஒன்பது கிரகங்களுக்கும் ராஜாவாக சூரிய பகவான் திகழ்கிறார். இவர் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் சூரிய பகவான் செப்டம்பர் 17, 2025 அன்று அதிகாலை 1:54 மணிக்கு சிம்ம ராசியில் தனது பயணத்தை முடித்து கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். இவர் அக்டோபர் 17 ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவர்களுக்கு தைரியம், தலைமைத்துவம், இலட்சியங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சூரியப் பெயர்ச்சியால் பலனடைய இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி நன்மை பயக்கும் இந்த காலகட்டத்தில் சூரியன் உங்களின் செல்வம் மற்றும் பேச்சு வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார் இதன் காரணமாக உங்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும் திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும் வாழ்க்கையில் நீங்கள் திட்டமிட்ட பணிகள் மற்றும் இலக்குகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் புதிய மற்றும் சிறந்த திட்டங்களில் முதலீடு செய்வீர்கள் இந்த நேரத்தில் உங்களின் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உண்டு ஒட்டுமொத்தமாக இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். சூரியன் தனுசு ராசியின் பத்தாவது வீட்டில் சஞ்சரிப்பதால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு சரியான பலன்கள் கிடைக்கும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலை பளு குறைவதால் மன அமைதி கிடைக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் தொழிலில் புதிய உத்திகளை வகுப்பதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் தொழில் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுத்து முன்னேறிச் செல்வீர்கள் உங்கள் நிதி நிலைமை மேம்படும் பொன் பொருள் வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
மேஷம்
சூரியனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும். மேஷ ராசியின் ஆறாவது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக உங்களுக்கு பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான அறிகுறிகள் உள்ளன. நிதிநிலைமை வலுவாக இருக்கும். எதிர்பாராத மூலங்களிலிருந்து பண ஆகாயங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்திற்காக கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இருப்பினும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது எதிர்மறை விளைவுகளை குறைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு சூரியன் 12வது வீட்டின் அதிபதியாவார். இந்த சூரிய பெயர்ச்சியானது கன்னி ராசியின் முதல் வீட்டில் நிகழ இருக்கிறது. சூரியன் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகும். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை அனைத்தும் உயரும். நீங்கள் எடுக்கும் காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் சுய வளர்ச்சிக்கான நேரம் இது. எந்த முடிவானாலும் அதை நிதானமாகவும், தெளிவாகவும் எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் முன்பு உங்கள் திறமைகளை காட்டி, முன்னேறிச் செல்வீர்கள். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம் என அனைத்துமே சிறப்பானதாக மாறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)