- Home
- Astrology
- Astrology: 1 வருடத்திற்குப் பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்
Astrology: 1 வருடத்திற்குப் பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்
வேத ஜோதிடத்தின் படி 2025 ஆம் ஆண்டில் சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் இணைவதால் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் சில ராசிகளுக்கு செல்வம், வெற்றி, மகிழ்ச்சியை வழங்கும் புண்ணிய யோகமாக அமைய உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கை
ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற உள்ளன. சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றிற்கு காரகராக விளங்குகிறார் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். இவர் செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். செப்டம்பரில் சுக்கிரன் மற்றும் சூரியன் இருவரும் துலாம் ராசியில் இணைகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மங்களகரமான சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்ராதித்ய ராஜயோகம் 2025
2025 ஆம் ஆண்டில் துலாம் ராசியில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. துலாம் ராசி சுக்கிரனின் சொந்த ராசியாக இருப்பதால் இந்த யோகத்தின் தாக்கம் மேலும் வலுவடைகிறது. இது உறவுகள் மற்றும் செல்வ வளர்ச்சியில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க உள்ளது. சுக்ராதித்ய ராஜயோகம் ஒரு வலிமையான யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் செல்வத்தை பெருக்குவதற்கு உகந்த நேரமாகும். முதலீடுகள், வணிக விரிவாக்கம், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வு, அங்கீகாரம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமண உறவுகளில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும். இந்த யோகமானது செப்டம்பர் முதல் அக்டோபர் வரை துலாம் ராசியில் நிகழும். இந்த ராஜயோகம் மூன்று ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்.
துலாம் ராசி
துலாம் ராசியின் முதல் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகுந்த சக்தி வாய்ந்த யோகமாக கருதப்படுகிறது. அவர்களின் தன்னம்பிக்கை, ஆளுமை, தலைமைத்துவத்துங்கள் மேம்படும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயங்கள் மற்றும் முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். உறவுகளில் மகிழ்ச்சி, புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்பு உண்டு. சமூகத்தில் மரியாதை மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுவதற்கு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இரண்டாம் வீடான நிதி மற்றும் செல்வ வீட்டில் உருவாகிறது. இது நிதி வளர்ச்சி மற்றும் செல்வத்தை பெருக்குவதற்கு உகந்த நேரமாக அமையும். எதிர்பாராத பண ஆதாயங்கள் மற்றும் வணிகத்தில் லாபம் ஆகியவை கிடைக்கலாம். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் மேம்படும். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தையில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் மற்றும் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். பொருளாதார நிலை மேம்படுவதால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
சுக்ராதித்ய ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீடான உறவுகளின் வீட்டில் உருவாகிறது. இது திருமண வாழ்க்கை மற்றும் வணிகக் கூட்டாண்மைகளுக்கு நன்மை பயக்கும். திருமண உறவுகளில் மகிழ்ச்சி மற்றும் புரிதல் அதிகரிக்கும். வணிகத்தில் புதிய கூட்டுகள் மற்றும் ஒப்பந்தங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் மன அமைதி ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். வணிகத்தில் புதிய திட்டங்களை தொடங்குவது பலனளிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வணிகத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் என இரண்டிலும் முன்னேற்றம் கிடைக்கும். மற்ற ராசிகளுக்கும் இந்த யோகம் நன்மைகளை வழங்கினாலும், மேற்கூறப்பட்ட ராசிகளுக்கு இதன் தாக்கம் வலுவாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: 2025 ஆம் ஆண்டில் துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் மேற்கூறப்பட்ட நான்கு ராசிகளுக்கு செல்வம், வெற்றி, மகிழ்ச்சியை வழங்கும் ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையும். இந்த கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள், வேத ஜோதிடம் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை பொதுவான பலன்கள் மட்டுமே. தனிப்பட்ட பலன்களை அறிவதற்கு அனுபவமிக்க ஜோதிடரிடம் கலந்தாலோசிப்பது நல்லது)

